ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், வருடத்திற்கு ஒருமுறை என்று தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். 8 அணிகளிலுமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஆனால் ஒரு சில அணிகள் மட்டும் தான், சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை குவித்து, ஐபிஎல் தொடரில் தலை சிறந்த அணியாக திகழ்கின்றனர். அவற்றில் மிக முக்கியமான அணிகள் என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த இரண்டு அணிகள் தான் ஐபிஎல் தொடரில் தலைசிறந்த அணிகளாக திகழ்ந்து வருகின்றனர். இவ்வாறு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணிகளில், எந்த அணி அதிக வெற்றிகளை குவித்துள்ளது என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
#1) மும்பை இந்தியன்ஸ் அணி ( 97 போட்டிகளில் வெற்றி )
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்துள்ள அணிகளின் பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. பொதுவாக அனைத்து ஐபிஎல் தொடர்களிலுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் அதிகமான அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திச் சென்றார். அதன் பின்பு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு, ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இன்றுவரை ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 171 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
#2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ( 91 போட்டிகளில் வெற்றி )
இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலைசிறந்த அணியாகத்தான் திகழ்ந்து வருகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விளையாட தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மீண்டும் காலடி எடுத்து வைத்தது. வழக்கம் போல் சிறப்பாக விளையாடி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 150 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் 91 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ( 85 போட்டிகளில் வெற்றி )
இந்தப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். இதுவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா அணி மொத்தம் 161 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 85 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.