நவீன கால கிரிக்கெட்டில் சாத்தியமான அசாத்திய ஷாட்கள்

AB De Villers
AB De Villers

பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் தொடங்கியது இந்த கிரிக்கெட் போட்டிகள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவடைய விரிவடைய உலகம் முழுவதும் பரவியது இவ்வகை போட்டிகள். முதலாவது சர்வதேச போட்டியானது அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அரங்கேறியது. பேட்டிங் வடிவங்கள், வகைவகையான பந்துகள், போட்டியின் விதிமுறைகள், பிரத்யேக கிரிக்கெட் உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்து துறையிலும் காலம் தோறும் மாற்றங்களை நடந்த வண்ணமே உள்ளது.

பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எனும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் உலக அளவிலான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் இப்போட்டியை பிரபலம் அடைய செய்தது. இதனால், சமீப காலங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன் என இருவரும் தங்களது திறமையையும் யுக்திகளையும் வளர்த்துக்கொண்டு இப்போட்டிகளில் வல்லவர்களாய் ஆகினர்.

அவ்வாறு, வளர்ச்சி அடைந்த நவீன கால கிரிக்கெட்டில் சாத்திய படுத்தப்பட்ட அசாத்தியமான ஷாட்களை இங்கு காண்போம்.

#1.தில் ஸ்கூப்:

Dilshan
Dilshan

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் பன்னிரண்டாவது சீசனில் முன்னாள் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன், “ ஸ்கூப்” எனப்படும் ஒரு புதுவகையான ஷாட்டை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். பின்னாளில் தில்ஷனிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் தன்னை முழுவதுமாக சூழப்பட்ட பீல்டர்களிடமிருந்து தப்பித்து ரன்களை குவிக்கவும், புதுவகையான கிரிக்கெட் ஷாட்டை விக்கெட் கீப்பரின் தலைக்குமேல் பறக்கச் செய்வதும் தான் எனது இலக்கு என்றார். மேலும் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்த ஷாட்டை கையாண்டு தொடர்ச்சியான வெற்றிகளையும் கண்டார், தில்ஷன். இது இளம் தலைமுறை வீரர்களுக்கு ஒரு உந்து கோலாக அமைந்தது.

இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் போன்ற வெகு சில சர்வதேச வீரர்களே இதுபோன்ற ஷாட்டை கையாண்டனர். 2016-ஆம் ஆண்டு தில்ஷனின் ஓய்வுக்கு பிறகு முன்பை போல அடிக்கடி எவரும் கையாளுவதில்லை. இருப்பினும், எவ்வித சந்தேகமும் இன்றி நவீனகால அற்புத ஷாட்களில் இதுவும் ஒன்று.

#2.ஸ்விட்ச் ஹிட்:

Kevin Pieterson
Kevin Pieterson

காலங்கள் மாற மாற கிரிக்கெட்டின் அனுபவ பந்துவீச்சாளர்களது டெலிவரிகளிடம் இருந்து பேட்ஸ்மேன்கள் தப்பிக்க மேலும் ஒரு அத்தியாயத்தை கையாளத் தொடங்கினர். கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் எதிர்பாராவிதமாக இவ்வகைச் ஷாட்களை கையாளத் தொடங்கினர். உண்மையில், இது போன்ற ஷாட்கள் எந்த ஒரு குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு பகுதி நேர பந்து வீச்சாளரின் ஓவரில் அறிமுகமாகவில்லை. அதற்கு மாறாக, 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதுவும் உலகின் அபாயகரமான சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஓவரில் இவ்வகை ஷாட்கள் அறிமுகமானது.

நீண்டகால முடிவுக்குப் பின்னர், 2012-இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ஷாட்டை அங்கீகரித்தது. மேலும், கிரிக்கெட் உலகமே இதனை வரவேற்றது. பீட்டர்சனை தவிர ஆஸ்திரேலிய வீரர்களான மேக்ஸ்வெல்லும் டேவிட் வார்னரும் ஸ்விட்ச் ஹிட்டை கையாண்டு கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழி வகை செய்தனர்.

#3.ஹெலிகாப்டர் ஷாட்:

Mahi's helicopter shot
Mahi's helicopter shot

இன்-ஸ்விங்கில் வரும் யார்க்கர் பந்துகளை அதிவேகமாகவும் சற்று வலிமையாகவும் மணிக்கட்டை சுழற்றி சிக்ஸராக மைதானத்திற்கு வெளியே பந்தை அனுப்பும் இந்தத் தந்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை ஆகும். இந்த தனிவகை ஷாட்டுக்கு உரித்தான நபர் மகேந்திர சிங் தோனி தான் என்று அனைவரும் கூறுவர். இவருக்கும் முன்னே 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேனான அப்துல் ரசாக்கிடமிருந்து தான் முதன் முதலில் இது வெளிப்பட்டது. பின்னர், 2002-இல் சச்சின் டெண்டுல்கர் இதேபோன்ற ஷாட்டை அதே அணிக்கு எதிராக கையாண்டார்.

பிறகு 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வேகப்புயல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தை சிறந்த பினிஷரான தோனி ஹெலிகாப்டர் சிக்சராக மாற்றியதன் பிறகே இந்த ஷாட்டை கிரிக்கெட் உலகமே நன்கு அறிந்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது சேஷாத் இவ்வகை ஷாட்டை அடித்து புகழ் பெற்றார். கிரிக்கெட் போட்டியானது அசுர வேகத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற காலகட்டத்தில் புதிய புதிய ஷாட்கள் அவ்வப்போது அறிமுகமாவதும் ரசிகர்கள் இதனை வரவேற்பது மட்டுமல்லாது கொண்டாடவும் செய்கின்றனர்.

Edited by Fambeat Tamil