டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக் காட்டிலும் ரசிகர்களுக்கு கவனத்தை அதிகம் ஈர்க்ப்பது டி20 போட்டிகள் தான். காரணம் அவ்வபோது பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடித்து ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டுவார்கள். டி20 என்றாலே அதிரடி தான் என்பது நம் அனைவருக்கும் அறிந்ததே. ஆனால் ஒருசில போட்டிகளில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்து வீச்சாளர்கள் நம் கவனத்தை ஈர்ப்பார்கள். அந்தவகையில் எதிரணி வீரர்களை ரன் குவிக்க விடாமல் குறைந்த ரன்களிலேயே சுருட்டிய போட்டிகளை இந்த தொகுப்பில் காணலாம்.
#3) நேபாளம் (53)
2015-ல் உலக கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றது. அதில் லீக் சுற்றின் 18வது போட்டியில் நேபாளம் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் நேபாள அணியின் துவக்க வீரர்களான புன் மற்றும் மண்டல் ஆகியோர் களமிறங்கினர். இந்த போட்டியில் நேபாள அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நேபாள வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் நேபாள அணி 14.3 ஓவரில் 53 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் நேபாள வீரர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற 9 வீரர்களில் இரண்டு வீரர்கள் 6 ரன்னும், மூன்று வீரர்கள் 2 ரன்னும், நான்கு வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி அயர்லாந்து அணி வெறும் 8 ஓவரில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
#2) மேற்கிந்திய தீவுகள் (45)
சமீபத்தில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரோ சமனில் முடிந்தது. டி20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற இரண்டாவது டி20 துவங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. துவக்கம் முதலே விக்கெட்டுகளை மலமலவென இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. கடைசியில் 11.5 ஓவர் முடிவில் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னே 10 தான்.
#1) நெதர்லாந்து (39)
நெதர்லாந்து அணியே இந்த வரிசையில் முலிடத்தைப் பிடிக்கிறது. 2014 உலகக்கோப்பை டி20 தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணகயை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது நெதர்லாந்து அணி. ஆரம்பம் முதலே தடுமாற்றத்தைக் கண்ட நெதர்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் எவராலும் இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 10.3 ஓவர் முடிவில் 39 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பில் ஒருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை குவித்தார். இந்த இலக்கை துரத்த களமிறங்கிய இலங்கை அணி வெறும் 5 ஓவரிலேயே 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குவிக்கப்பட்ட 39 ரன்களே இன்றளவும் சர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.