சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், அதிக ரன்களை குவித்துள்ள டாப் - 3 வீரர்கள்!!

Ricky Ponting And Sachin Tendulkar
Ricky Ponting And Sachin Tendulkar

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், ஒரு அணியின் பேட்ஸ்மேனின் சிறந்த விளையாட்டு என்பது அந்த அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 50 ஓவர் போட்டி என்பதால் அதிக பொறுமை தேவை. அடித்து விளையாட நினைத்தால் விரைவில் அவுட் ஆகி வெளியேறக் கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே பொறுமையாக விளையாடினால் மட்டுமே அதிக ரன்களை அடிக்க முடியும். இவ்வாறு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்களை குறித்துள்ள 3 ஜாம்பவான்களை பற்றி இந்த பட்டியலில் காண்போம்.

#1) சச்சின் டெண்டுல்கர் ( 18426 ரன்கள் )

Sachin Tendulkar
Sachin Tendulkar

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான், மற்றும் “கிரிக்கெட்டின் கடவுள்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர். இவர் தனது சிறப்பான விளையாட்டின் மூலம், கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார். இன்று கிரிக்கெட் விளையாட்டில் வளர்ந்து வரும், பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் எப்போது அவுட் ஆனாலும், தனி ஒருவராக நின்று அணியை சரிவில் இருந்து மீட்க கூடிய திறமை படைத்தவர்.

இவர் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டில் சச்சினுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு தனது சிறப்பான விளையாட்டின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் மொத்தம் 463 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதில் 18,426 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 49 சதங்களையும், 96 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2) குமார் சங்கக்காரா ( 14234 ரன்கள் )

Kumar Sangakkara
Kumar Sangakkara

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின், ஜாம்பவான் குமார் சங்கக்காரா. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி ஒரு நல்ல நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் குமார் சங்கக்காரா. இவர் ஒரு நாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு வித கிரிக்கெட் போட்டிகளிலுமே, இலங்கை அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்தார். ஆனால் ஏற்கனவே இவர், அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தம் 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 14234 ரன்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும், 93 அரை சதங்களும் அடங்கும்.

#3) ரிக்கி பாண்டிங் ( 13704 ரன்கள் )

Ricky Ponting
Ricky Ponting

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சினுக்கு நிகராக பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா அணி பல முக்கியமான போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, இவர்தான் முக்கிய காரணமாக திகழ்ந்திருக்கிறார். இவர் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழி நடத்திய போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தலை சிறந்த அணியாக திகழ்ந்து வந்தது. இவர் மொத்தம் 375 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அதில் 13704 ரன்களை குவித்துள்ளார். இவர் மொத்தம் 30 சதங்களையும், 82 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

App download animated image Get the free App now