அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரானது வருடம் தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பல அதிரடி பேட்ஸ்மேன்களும், தலைசிறந்த பந்து வீச்சாளர்களும், இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். எனவே தான் ரசிகர்களிடையே இந்த ஐபிஎல் தொடரானது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பந்துவீச்சாளர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) டுவைன் பிராவோ ( 2013 ஆம் ஆண்டு 32 விக்கெட்டுகள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த, டுவைன் பிராவோ. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடுவார்.
பல போட்டிகளில் தனி ஒருவராக போராடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரானது, இவருக்கு மிகச் சிறப்பானதாக அமைந்தது. 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றி, “பர்ப்பிள் கேப்” விருதினை தட்டிச் சென்றார்.
#2) லசித் மலிங்கா ( 2011 ஆம் ஆண்டு 28 விக்கெட்டுகள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளரான, லசித் மலிங்கா. இவரும் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பந்து வீச்சாளர்களின் பட்டியலில், லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் மிக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற, இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீசிய லசித் மலிங்கா, தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக பந்துவீசி, 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை திரில் வெற்றி பெறச் செய்தார். 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரானது, இவருக்கு சிறப்பான தொடராக அமைந்தது. அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி, அதில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, “ பர்ப்பிள் கேப்” விருதினை தட்டிச் சென்றார்.
#3) ஜேம்ஸ் பால்க்னர் ( 2013 ஆம் ஆண்டு 28 விக்கெட்டுகள் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜேம்ஸ் பல்க்னர். இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீரர். இவர் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி, அதில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.