Create
Notifications
New User posted their first comment
Advertisement

ஐபிஎல் 2019 : கூடுதல் விலைக்கு ஏலம்போன 4 வீரர்கள்

ANALYST
Modified 19 Dec 2018, 18:25 IST
முதல் 5 /முதல் 10
Advertisement

#2. வருண் சக்கரவர்த்தி - கிங்ஸ் KI பஞ்சாப் -8.4 கோடி

வருண் சக்கரவர்த்தி 
வருண் சக்கரவர்த்தி 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயாஜால பௌளரான இவர், உள்ளூர் போட்டிகளின் மூலம் இவர் அசுர வளர்ச்சி பெற்றார். கட்டட வடிவமைப்பாளராக இருந்த வருண், கிரிக்கெட் மீது உள்ள ஈடுபாட்டினால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். முதலில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவர் முழங்காலில் காயம் ஏற்பட்ட காயத்தினால் சுழற்பந்து வீச்சாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.

2018 தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் தனக்கான அடையாளத்தை பெற்றார் வருண். தொடர் முழுவதும் போட்டிருந்த 240 பந்துகளில் 125 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்பெறவில்லை (டாட் பால்) என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அணிக்காக விளையாடி இருந்த வருண், 10 போட்டிகளில் நம்பமுடியாத எகானமியான 4.7-ஐ வைத்திருந்தார்.

டிஎன்பிஎல் போட்டிகளில் இருந்து கிடைத்த உத்வேகத்தால், விஜய் ஹசாரே கோப்பையிலும் நன்கு பங்காற்றியிருந்தார் வருண். 22 விக்கெட்டுகளை வெறும் 9 போட்டிகளிலே சாய்த்திருந்தார்.

இவர் ஏழு விதமான வேறுபாடுகளில் போடக்கூடியவர் : ஆப் பிரேக், லெக் பிரேக், கூகுலி, கர்ரோம் பால், பிலிப்பர், டாப் ஸ்பின்னர், ஸ்லைடிங் யார்க்கர். 

வருண் தான் ஆடியிருந்த அணிக்காக சிறப்பாக பங்காற்றியிருந்தாலும், ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை அவர் ஒரு புதியவர். கட்டாயமாக நன்கு ஆட வேண்டும் என்ற அழுத்தம் இருக்கத்தான் செய்யும். எனவே இவர் சொதப்புவதுற்கு வாய்ப்புள்ளது. மேலும் பஞ்சாப் அணியிடம் ஆப்கானிய மாயாஜால சுழற் பந்துவீச்சாளரான முஜீப், மற்றும் கேப்டன் அஸ்வின் உள்ளதால், ஏன் இன்னொரு ஸ்பின்னர்-க்கு போனார்கள் என்பது தெரியவில்லை.

மூன்று அல்லது நான்கு கோடிகளுக்கு இவரை வாங்கியிருக்கலாம்.

#1. பிரப்சிம்ரன் சிங் - கிங்ஸ் XI பஞ்சாப் - 4.8 கோடி

Advertisement
பிரப்சிம்ரன் சிங்
பிரப்சிம்ரன் சிங்

பிரப்சிம்ரன் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இவரின் இலட்சிய மனிதர்கள் வீரேந்தர் சேவாக் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட். கிரிக்கெட் மீது இவரின் ஈடுபாடானது தனது மூத்த அண்ணன் வலைப்பயிற்சியில் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்து வளர்ந்ததுதான். இவருடைய மூத்த அண்ணன் வேறு யாருமில்லை ஏலத்தில் மும்பை அணியால் 80 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அன்மோல்ஃபீரித் சிங் தான்.

பிரப்சிம்ரன் சிங் சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சிக்காக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரூம் தற்போதைய தேர்வாளர்களில் ஒருவரான கிரண் மோரேவால் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட அளவில் நடந்த 23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில், அமிர்தசரஸ் அணிக்கு எதிராக 302 பந்துகளில் 298 ரன்கள் எடுத்திருந்தது மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர். இதற்கு முன்பாகவே பஞ்சாப் அணிக்காக கூச் பெஹார் டிராபியில் 557 ரன்களை எடுத்திருந்தார்.

இவரிடம் திறமை இருந்தாலும், இந்திய உள்ளூர் போட்டிகளில் இவர் இன்னும் களம் காணவில்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இவர் நன்கு ஆடுவாரா என்பது சந்தேகமே. யாரும் அறியப்படாத வீரரான இவர் ஐபிஎல் போட்டிகளில் எப்படி ஆடப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREVIOUS 2 / 2
Published 19 Dec 2018, 18:25 IST
Advertisement
Fetching more content...
App download animated image Get the free App now
❤️ Favorites Edit