இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை பற்றிய தொகுப்பு இது. இந்திய அணி ஆஸ்திரேலி மண்ணில் வெற்றி பெறுவது என்பதே மிகவும் அரிது. இதிலும் ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்திய அணி இந்திய மண்ணிலேயே ஆஸ்திரேலியாவிடம் பல ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆஸ்திரேலிய அணி எப்போதும் தரமான பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக விளங்குகிறது. மெக்ராத், ப்ரெட் லீ, ஜான்சன், மிட்சில் ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் ஷேன் வார்னே, நாதன் லயன் போன்ற தரமான சுழல் பந்துவீச்சாளர்களையும் உருவாக்கிய அணி ஆஸ்திரேலியா. இப்படிப்பட்ட ஆஸ்திரேலி அணியின் பந்துவீச்சை எதிர்த்து இந்திய அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை இங்கு காண்போம்.
#4 532/10 (2008) சிட்னி - தோல்வி
அனில் கும்பிளே தலைமையிலான இந்திய அணி 2007-2008 ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்ன்-ல் துவங்கியது இந்த போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னி-யில் துவங்கியது இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் 154 ரன்கள், வி.வி.எஸ் லட்சுமணன் 109 ரன்களும் கு வித்தனர். ராகுல் டிராவிட், கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் தங்களது பங்கிற்கு அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை 532 ஆக உயர்த்தினர். இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்ல் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால் வெறும் 210 ரன்கள் மட்டுமே எடுத்து 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
#3 600/4 (1986) சிட்னி - டிரா
கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1985-1986-ல் ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 2 போட்டிகள் டிரா-வான நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியான டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துவக்க வீர்களாக களமிறங்கிய கவாஸ்கர் 172 ரன்களும், ஶ்ரீகாந்த் 116 ரன்களும் குவித்து நல்ல தொடக்கத்தை தந்தனர். பின்னர் களமிறங்கிய அமர்நாத் 138 ரன்கள், கேப்டன் கபில் தேவ் 42 ரன்கள், அசாருதின் 59 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை 600 ஆக உயர்த்தினர். இந்நிலையில் இந்திய அணி 600/4 என்ற ஸ்கோரை எட்டிய போது டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்ல் 396 ரன்களுடன் பாலோஆன் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ்ல் 119/6 என்ற நிலை ஐந்தாவது நாள் ஆட்டம் நிறைவுற்றதால் ஆட்டம் டிராவானது.
#2) 622/7 (2019) சிட்னி
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி யில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 622/7 என்ற நிலையில் டிக்லேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 193 ரன்களும், ரிஷப் பண்ட் 159 ரன்களும் குவித்தனர். மயங்க் அகர்வால் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறது. பெரும்பாலும் இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
#1 705/7 (2004) சிட்னி - டிரா
கங்குலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கியது. 2003-2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில் தொடர் 1-1 என்ற நிலையில் சமனாக இருந்தது. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 705/7 ரன்கள் குவித்து நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 241*, வி.வி.எஸ் லட்சுமணன் 178, சேவாக் 72 மற்றும் பார்தீவ் படேல் 62 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்ல் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்ல் 211/2 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இதில் டிராவிட் 91* ரன்களும், சச்சின் 60* ரன்களும் குவித்தனர். 474 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 357/6 என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர போட்டி டிராவானது. இந்திய அணி சார்பில் அனில் கும்பிளே 12 விக்கொட்டுகளை வீழ்த்தினார். தொடர் சமனாக முடிந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகனாகவும், ராகுல் டிராவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆட்டத்தில் குவிக்கப்பட்ட 705 ரன்னே இந்திய அணி ஆஸ்திரேலியாவில் குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.