ஒருநாள் கிரிக்கெட்டானது மிக முக்கிய கிரிக்கெட் போட்டிகளாக 2018ல் பார்க்கப்பட்டது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கும் உலகக் கோப்பை தொடர் மிக முக்கியமானது ஆகும்.
ஏற்கனவே டாப் 8 கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது . மற்ற இரு அணிகளான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை தகுதி சுற்று மூலம் உலகக்கோப்பை விளையாட தேர்வாகினர்.
2018ஆம் ஆண்டில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பைக்கு தங்களை தயார் செய்யும் நோக்கில் சிறப்பாக விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணி வீரர்களும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் தங்களது அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளனர். இவ்வாறு 2018ல் நடந்த ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முதல் 4 அணிகளைப் பற்றி காண்போம்.
#4.தென்னாப்பிரிக்கா
2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு சுமாரான ஆண்டாகவே இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி 2018ல் மொத்தமாக 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் 9 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2018ல் 4 ஒருநாள் தொடர்களில் பங்கேற்று 3 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதில் 2 அந்நிய மண்ணிலும் 1 சொந்த மண்ணிலும் அடங்கும்.
#3.வங்கதேசம்
2018ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு நல்ல வருடமாகவே அமைந்தது. வங்கதேச அணி 2018ல் மொத்தமாக 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் 9 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளும் , சொந்த மண்ணில் 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றிகளையும் வங்கதேச அணி பெற்றுள்ளது. வங்கதேச அணி 1 டிரை சீரிஸ் , ஆசியக்கோப்பை உட்பட 3 தொடர்களை 2018ல் விளையாடியுள்ளது. டிரை சீரிஸ் மற்றும் ஆசியக்கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது வங்கதேச அணி. 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி மூன்றையுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு தொடர் அந்நிய மண்ணிலும் இரு தொடர் சொந்த மண்ணிலும் வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது.
#2.இந்தியா
இந்திய இந்திய அணிக்கு 2018 ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்திய அணி 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 16 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி அந்நிய மண்ணில் 15 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 12 வெற்றிகளையும் , சொந்த மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்திய அணி 2018ல் ஆசியக் கோப்பை மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடியது. அதில் ஆசியக்கோப்பை மற்றும் 2 தொடர்களை வென்றுள்ளது. இதில் 1 தொடர் அந்நிய மண்ணிலும் 1 தொடர் சொந்த மண்ணிலும் கைப்பற்றியுள்ளது.
#1.இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு 2018ஆம் ஆண்டு அற்புதமான வருடமாகவே அமைந்தது. இங்கிலாந்தில் 2019 உலகக் கோப்பை நடைபெறும் என்பதால் தனது முதல் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது ஒருநாள் அணியை சிறப்பாக தயார் செய்து வைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 2018 ல் 24 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி அந்நிய மண்ணில் 16 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10 வெற்றிகளையும் , சொந்த மண்ணில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 1 போட்டி மழையினால் தடைபட்டது. இங்கிலாந்து அணி 2018ல் 5 ஒருநாள் தொடர்களில் விளையாடியது. அதில் 4 தொடர்களில் வென்றுள்ளது. இதில் 2 தொடர் அந்நிய மண்ணிலும் 2 தொடர் சொந்த மண்ணிலும் கைப்பற்றியுள்ளது.