இந்திய அணிக்காக 2 சகாப்தங்களாக விளையாடும் சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பைகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், உலக கிரிக்கெட்டின் அடையாளம் என சச்சின் டெண்டுல்கரை வர்ணனை செய்கிறார்கள்.
வெறும் 19 வயதில் 1992 தனது முதல் உலககோப்பையில் விளையாடிய இவர் இறுதியாக 2011 உலககோப்பையில் காட்சியளித்திருந்தார்.
2003 சச்சின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய 98 விரல்விட்டு எண்ணகூடிய 10 சிறந்த உலககோப்பை ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது , தனது தந்தை இழப்பின் போது கென்யா அணிக்கு எதிராக விளாசிய 143 உலக கிரிக்கெட் ரசிகர்களால் இன்றுவரை நினைவு கூறப்படுகிறது மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011 உலககோப்பையில் ஆடியது ரசிகர்களால் மறக்கமுடியாத ஆட்டங்களாகும்.
சச்சின் டெண்டுல்கர் உலககோப்பைகளில் செய்த சாதனைகள் பல அதில் முறியடிக்க முடியாத 4 சாதனைகளை பார்ப்போம்.
#4. உலககோப்பைகளில் அதிக நான்கு ஓட்டங்களை அடித்த ஒரே வீரர்:
உலககோப்பைகளில் 200 இக்கு மேற்பட்ட நான்கு ஓட்டங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் தன்னகத்தே கொண்டுள்ளார். மொத்தமாக 45 உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 241 நான்கு ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னால் தலைவர் ரிக்கி பாண்டிங் வெறும் 96 நான்கு ஓட்டங்களையே அடித்துள்ளார். தனது அருகில் உள்ள போட்டியாளரை விட 104 நான்கு ஓட்டங்கள் முன்னிலையில் சச்சின் இருப்பது முக்கிய அம்சமாகும். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் 90 நான்கு ஓட்டங்களை அடித்த எந்த ஒரு வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#3. உலககோப்பைகளில் அதிக ஓட்டடங்களை குவித்த வீரர்
உலககோப்பைகளில் 2000 ஓட்டங்களை அடித்துள்ள ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 227 ஓட்டங்களை 56.95 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். இதில் 6 சதங்களும், 15 அரைசதங்களும் உள்ளடங்குகிறது.
இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங்-ஐ விட சச்சின் 535 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளார். இந்த வரிசையில் 1000 ஓட்டங்களை நெருங்கியுள்ள கிரிஸ் கேய்ல் தற்போது விளையாடிக் கொண்டிருப்பவர்களில் முன்னிலையில் இருப்பவர்ஆவார் இவர் 944 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு இந்த இலக்கு ஒரு எட்டாக்கனியாகும்.
#2. உலககோப்பைகளில் அதிக அரை சதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரே வீரர்
உலககோப்பைகளில் 15 அரைசதங்களையும், 6 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். இது மொத்தமாக 21 அறைசதங்களை உள்ளடக்குகிறது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தை குமார் சங்கக்கார உள்ளார்.
தற்போது இருக்கும் வீரர்களில் 6 அரைசதங்களுக்கு மேல் அடித்த வீரர் எவரும் இல்லை.
#4. உலக கோப்பைகளில் அதிகூடிய போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்
6 உலககோப்பைகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 42 உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் சச்சினுக்கு அடுத்த படியாக இவ்வரிசையில் உள்ளார்.
26 போட்டிகளில் விளையாடிவரும் கிறிஸ் கேய்ல் தற்போது விளையாடும் வீரகளில் முன்னிலையில் இருப்பவர் இருப்பினும் இவரால் சச்சினின் சாதனையை நெருங்குவது ஒரு முடியாத காரியமாகவே கருதப்படுகிறது.
நவீன கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் இந்த நான்கு சாதனைகளையும் முறியடிக்க முடியாத சாதனையாக திகழும் என்பது கணிப்பு.