2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடயுள்ள வீரர்களில் அதிக சாரசரி வைத்துள்ள டாப்-5 வீரர்கள்?

Pravin
ஆஷஸ் கிரிக்கெட் தொடர்
ஆஷஸ் கிரிக்கெட் தொடர்

உலக புகழ் பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடராகும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றனர். இங்கிலாந்தில் இப்பொழுது தான் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் உலககோப்பையை வென்ற உற்சாகத்தில் உள்ளது. அதே நேரம் ஆஸ்திரேலியா அணி உலககோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியதற்கு பழிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் செப்டம்பர் மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்கள் ஆஷஸ் தொடர்களில் பல சாதனைகளை படைத்துள்ளனர். அதில் தற்பொழுது நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ள வீரர்களில் அதிர சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம். இந்த ஆஷஸ் தொடரின் முலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் இருவரும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளனர். இவர்கள் இருவருமே ஆஷஸ் தொடர்களில் அதிக சாரசரி வைத்துள்ளவர்களின் பட்டியலில் உள்ளனர்.

ஜோ ரூட்
ஜோ ரூட்

இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களில் பேட்டிங்கில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளவர். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட். ஜோ ரூட் 2007 ஆம் ஆண்டில் இருந்து ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இவர் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 48.68 சாரசரி வைத்துள்ளார். அதே போல் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மட்டும் 42.78 சாரசரி வைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர்களிலேயே ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர் ஜோ ரூட் தான்.

டிம் பைன்
டிம் பைன்

இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது தற்போதைய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பைன். ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஒர் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டிம் பைன் தொடர்ந்து கேப்டானாக செயல்பட்டு வருகிறார். இவர் இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 35.14 சாரசரி வைத்துள்ள டிம் பைன் ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 48.00 சாரசரி வைத்துள்ளார். இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பைன்.

இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். ஓர் ஆண்டு தடைக்கு பின்னர் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் 2011 ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றார். இதுவரை 74 டெஸ்ட் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள டேவிட் வார்னர் 48.20 சாரசரி வைத்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மட்டும் டேவிட் வார்னர் 49.03 சாரசரி வைத்துள்ளார்.

டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித்
டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித்

இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் பேட்டிங்கில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் மிச்செல் மார்ஷ். 2014 ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் மிட்செல் மார்ஸ் இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25.40 சாரசரி வைத்துள்ள நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மட்டும் மிட்செல் மார்ஷ் 52.57 சாரசரி வைத்துள்ளார்.

இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக சாரசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டிவன் ஸ்மித் தான். ஸ்டிவன் ஸ்மித் ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆஷஸ் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இணைகிறார். ஸ்டிவன் ஸ்மித் 64 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் ஆஷஸ் போட்டிகளில் மட்டும் 56.27 சாரசரி வைத்துள்ளார்.