உலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்

உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் கிளைவ் லாயிட், கபில் தேவ், ஆலன் பார்டர், இம்ரான் கான், அர்ஜுனா ரனதுங்கா, ஸ்டீவன் வாஃக்
உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் கிளைவ் லாயிட், கபில் தேவ், ஆலன் பார்டர், இம்ரான் கான், அர்ஜுனா ரனதுங்கா, ஸ்டீவன் வாஃக்

#2. ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து- 16 வெற்றிகள்)

ஸ்டீபன் ஃப்ளெமிங்
ஸ்டீபன் ஃப்ளெமிங்

உலகக் கோப்பை தொடர்களில் 16 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை தங்களது அணிக்கு பெற்றுதந்த கேப்டன்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் தலைமையின் கீழ் நியூசிலாந்து அணி கருப்புக் குதிரைகளாகவே ( டார்க் ஹார்ஸஸ்) செயல் பட்டனர். இவரது கேப்டன்சிப்பில் நியூசிலாந்து அணி இரு முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 2007 இல் உலகக் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்தது. மேலும், 2007 உலகக் கோப்பையில் அதுவரை நியூசிலாந்து தோல்வியை சந்திக்காமல் இருந்தது. உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை அணியை வழி நடத்தியுள்ளார்.

#1. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா- 26 வெற்றிகள்)

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

எதிர்பார்த்தபடி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக (பேக் டு பேக்) 24 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளைப் பெற்ற சாதனையாளராகவும் உள்ளார். அவரது தலைமையில், ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் உலகக் கோப்பையை வென்றது. 2011 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவரது தலைமையின் கீழ் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியுடன் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. உலகக் கோப்பையில் வெற்றி சதவீதமாக அதிகபட்சமாக 90 வைத்துள்ளார். உலகக் கோப்பையின் மிக வெற்றிகரமான கேப்டன் என்றால் ரிக்கி பாண்டிங் வரலாற்றை நினைவுபடுத்துவார். இவரது அணியில் உலகின் தலை சிறந்த வீரகளாக மதிக்கப்படும் மத்யு ஹேடன், ஆடம் கில்கிறிஸ்ட், டேமியன் மார்டின், மைக்கேல் பெவன், க்ளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி மற்றும் பிரட் லீ ஆகியோர் இடம் பெற்றிருந்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Quick Links