இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாதது. தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் இந்திய அணியில் விளையாடி உள்ளனர். பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் தமிழக வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடினர். தினேஷ் கார்த்திக், அஷ்வின், முரளி விஜய், வாசிங்டன் சுந்தர், விஜய் சங்கர், முகுந்த் ஆகியோர் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் 70 மற்றும் 80-களில் பல வீரர்கள் இநந்திய அணியில் விளையாடி உள்ளனர். இதில் சிறந்த5 வீரர்களை இங்கு காணலாம்.
#5 ராபின் சிங்
கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங்கை விட முக்கியமானது எதுவெனில் அது பீல்டிங். ப்ரெண்டன் மெக்கல்லம், ஜோண்டி ரோட்ஸ் , சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் இதில் சிம்மசொப்பனமாக விளங்கினர்.தேவையற்ற ரன்களை குறைப்பதே பாதி வெற்றியை நிர்ணயம் செய்கிறது. இவ்வாறு 1990’களில் இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் பீல்டிங் தலை சிறந்து விளங்கினார். 1997-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்ல் சதம் விளாசிய அவர் அதே போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதுமட்டுமின்றி 1998 டாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் விளாசி இந்திய அணியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற வைத்தார். அதனால் இவர் இந்த வரிசையில் ஐந்தாம் இடம் வகிக்கிறார்.
#4 முரளி விஜய்
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குபவர் முரளி விஜய். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் இந்திய அணியின் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் பல சதங்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் பல போட்டிகளில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
#3 தினேஷ் கார்த்திக்
தற்போது தமிழக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். காரணம் இவர் நிதஷாஸ் டிராபி இறுதிப் போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை கோப்பையை வென்றுத் தந்ததின் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டார். இவர் 2004 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் தோனியால் இவரது இடம் பறிபோனது. இருந்தாலும் இந்திய அணியில் அவ்வப்போது தலைகாட்டி வரும் இவர் தற்போது அணியில் முக்கிய வீரராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இந்திய அணியின் பினிசராக இவர் தற்போது விளங்கி வருகிறார். இவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 9 முறை அரை சதங்கள் விளாசியுள்ளார். இது அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நடக்கவிருக்கும் 2019 உலக கோப்பை போட்டியில் முக்கிய வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 ரவிச்சந்திர அஷ்வின்
அனில் கும்பிளே- விற்கு பிறகு இந்திய அணியில் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடர்களில் முக்கிய பந்து வீச்சாளராக விளங்கினார் அஷ்வின். ஆனால் 2017 சேம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாலராக விளங்குகிறார். இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 100, 200 மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை இவரையே சாரும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் அஷ்வின்.
#1 கிரிஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்
தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் தனது வித்தியாசமான வர்ணனை திறனால் அனைத்து தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். ஆனால் இவர் 1980களில் இந்தியா-வின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடியவர் இவர். 1983 உலக கோப்பை தொடரில் இவரது பங்கு இன்றியமையாதது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உடையவர் ஶ்ரீகாந்த். இவர் 72 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 28.88 சராசரியுடன் 2 சதங்கள் மட்டுமே விளாசி இருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் 145 இன்னிங்ஸ்ல் 4000-க்கும் மேற்ப்பட்ட ரன்கள் விளாசினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதலில் 4000 ரன்கள் விளாசிய இந்திய வீரர் இவரே. 1986-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் 104 பந்துகளில் 102 ரன்கள் விளாசியது மறக்க முடியாத வெற்றியாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 103 பந்துகளில் 123 ரன்கள் விளாசி அசத்தினார்.
இவர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் பணியாற்றினார். பின் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.