ராஞ்சியை சேர்ந்த பேட்ஸ்மேன் மற்றும் சாதனை நாயகன், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை பயணங்கள் மிகப் பெரியது ஆகும். இவருடைய வரலாற்று சிறப்புமிக்க உலக சாதனைகள் என்றென்றும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாதது ஆகும்.
2004ல் அறிமுகமான இவர் நிறைய வரலாற்று சிறப்புமிக்க சாதனையை முறியடித்து உள்ளார். அத்துடன் புதிய உலக சாதனைகளை படைத்து ஒரு முன்னணி கேப்டனாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இவரை போன்ற ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை இந்திய அணி இதுவரை தேடிக்கொண்டு வருகிறது. தோனி தன்னுடைய முழு திறனையும் 2007 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அளித்தார்.அணிக்காக தனது ஆட்டத்திறனை கடினமான சமயங்களில் அளித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நிறைய சமயங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய அணியின் முன்னேற்றத்திற்காக தனது முழு ஒத்துழைப்பையும் இவர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிறைய சாதனைகளை படைத்தும் , முறியடித்தும் உள்ளார். நாம் இங்கு அவர் படைத்த சாதனைகளுள் முறியடிக்க முடியாத 5 சாதனைகளை காண்போம்.
#1. ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன்
எம்.எஸ்.தோனியின் தலைமையிலான இந்திய அணி நிறைய சாதனைகளை மற்றும் கோப்பைகளை வென்று குவித்துள்ளது. இவர் 2007 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு தோனி கேப்டனாக பதவியேற்று நிறைய தொடர்களை தனது கேப்டன் ஷிப்பில் வென்றுள்ளார்.
இவருடைய கேப்டன் ஷிப் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தோனி மிகவும் பிடித்த கேப்டனாக உள்ளார்.கடினமான சமயங்களில் இவருடைய அமைதி மற்றும் எடுக்கும் முடிவுகள் இவரை ஒரு சிறந்த கேப்டனாக உருவாக்கியுள்ளது.
தோனி ஐசிசி-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்றுள்ளார். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் எந்த கேப்டனும் இந்த சாதனையை செய்ததில்லை.2007 டி20 உலகக் கோப்பை, 2011- ஓடிஐ உலகக் கோப்பை, 2013-சேம்பியன் டிராபி என மூன்று கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இந்த சாதனையை இனி யாராலும் செய்ய முடியாத சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுவரை மற்ற அணிகளில் இம்மூன்று கோப்பைகளும் வெவ்வேறு கேப்டன்களால் வெல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
#2. 6 டி20 உலகக் கோப்பையில் ஒரு அணியை வழிநடத்திய ஒரே கேப்டன்
2007ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோனி கேப்டனாக கலக்கி அவரது கேப்டன் ஷிப்பில் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றார். அதற்குப் பிறகு இவர் தலைமையில் விளையாடிய 5 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி. கோப்பையை வெல்லவில்லை.
2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பைக்கு அருகில் சென்று இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 192 இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது இந்திய அணி.
இதுவரை எந்த கேப்டனும் 3 டி20 உலகக் கோப்பைக்கு மேல் கேப்டன் பதவி வகித்தது இல்லை. தோனி மொத்தமாக இந்திய அணியின் கேப்டனாக 10-12 வருடங்கள் இருந்து இச்சாதனையை முறியடித்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் தனது ஃபிட்னஸ், ஆட்டத்திறனை சரியாக கடைபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் தோனி இதனை சரியாக கடைபிடித்து இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார்.
தோனியின் கடைசி டி20 உலகக் கோப்பை 2017 ஆகும். ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
#3.அதிவேகமாக சர்வதேச ஓடிஐ தரவரிசையில் முதலிடம் பிடித்தவர்
தோனி இந்திய அணியில் இடம்பெற்று 3 ஆண்டுகளுக்குள் இந்திய கேப்டனாக உயர்வு பெற்றார். 2004ல் அறிமுகமானா இவர் தனது முதல் ஓடிஐயில் மோசமாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் , அடுத்தடுத்து தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி ஓடிஐ கிரிக்கெட் தரவரிசையில் முன்னேறி ஒரு சாதனையை படைத்துள்ளார்.
2005ல் இலங்கைக்கு எதிராக 183* மற்றும் அதே ஆண்டில் பாகிஸ்தானிற்கு எதிராக 148 அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறந்த ஓடிஐ இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. இவர் தன்னை மேம்படுத்தியதோடு இந்திய அணியையும் வெகுவாக மேம்படுத்தினார். தோனி தனது 42வது ஓடிஐ இன்னிங்ஸ் முடிவில் ஐசிசி ஓடிஐ பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இது அதிவேக சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையை இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை. இனிவரும் காலங்களிலும் இச்சாதனை முறியடிக்கப் படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
#4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்
தோனியை பற்றி நாம் பேச ஆரம்பித்தால் இந்த மூன்று விஷயங்கள்தான் முதலில் நியாபகத்திற்கு வரும். 1) கேப்டன்ஷிப் 2) ஃபினிஷர் 3) சிறந்த விக்கெட்கீப்பிங்
தோனியின் ஸ்டம்பிங் ஸ்டைலானது மிகவும் அபுர்வமான ஒன்றாகும். ஒளியின் செல்லும் அளவும் , இவரது ஸ்டம்பிங்கும் ஒரே அளவில் சரியானதாக இருக்கும். தோனியின் ஸ்டம்பிங் ஸ்பீடானது 0.06-0.07 விநாடிகளுக்குள்ளதாகவே இருக்கும். முன்னாள் இந்திய கேப்டன் தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக அசத்தியுள்ளார். இவர் ஸ்டம்பிற்கு பின்னால் நின்றால் எந்த பேட்ஸ்மேனும் கிரிஸை விட்டு நகர மிகவும் தயங்குவர். தோனி 188 ஸ்டம்பிங்கை சரிவதேச போட்டிகளில் செய்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக குமார் சங்கக்காரா 139 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
தற்போதைய தலைமுறையில் சப்ராஸ் அகமது 54 ஸ்டம்பிங்கையும், டிகாக் 25 ஸ்டம்பிங்கையும் செய்துள்ளார். தோனிக்கும் மற்ற விக்கெட் கீப்பர்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத வகையில் ஸ்டம்பிங் சாதனையை படைத்துள்ளார். இதற்கு அவரது ஆட்டத்திறனும் ஒரு முக்கிய காரணமாகும். இச்சாதனை கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க முடியாத ஒன்றாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
#5.அதிக சர்வதேச போட்டிகளில் கேப்டனாக விளையாடிய முதல் வீரர்
கரேபியனில் நடந்த 2007 உலகக் கோப்பையில் இந்திய அணி நாக்-அவுட் சுற்றில் வெளியேறியது. இதற்குப் பிறகு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டனாக தோனியின் முதல் சர்வதேச போட்டி பாகிஸ்தானிற்கு எதிரான 2007 டி20 உலகக் கோப்பை ஆகும். தோனி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஒரு சிறந்த கேப்டனாக இந்திய அணியில் செயல்பட்டு உள்ளார்.தோனி 2014ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். 2017ல் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
10 வருடங்களாக இந்திய கேப்டன் பதவி வகித்த தோனியின் தலைமையில் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் 178 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி சராசரி 53.61 ஆகும். ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தற்போதைய தலைமுறையில் விராட் கோலி 126 போட்டிகளிலும், கானே வில்லியம்சன் 116 போட்டிகளிலும் கேப்டனாக விளையாடியுள்ளனர்.
இச்சாதனை முறியடிக்கப் படதா ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சில அணிகளில் ஒவ்வொரு வகையான கிரிக்கெட் போட்டிகளில் வெவ்வேறு வீரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.