ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் 7 இடங்களில் 5 இடங்களில் இந்தியர்களே உள்ளனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். அப்பேதைய காலக்கட்டத்தில் அதுதான் தனிநபர் அதிகபட்ச ரன். ஆனால் அதன் பின்னர் ஆறு முறை 200 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் ஷர்மாவின் 264* ரன்கள் தான் இன்றளவும் ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்னாக உள்ளது. இந்தியர்கள் பேட்டிங்ல் இவ்வளவு வலுவாக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) தில்ஷன் 160 (2009)
2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து விரேந்திர சேவாக்-ன் அதிரடியால் 414 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் தில்ஷன் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். அதிரடியாக ஆடிய அவர் 160 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி போட்டியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருந்தாலும் சேசிங்ல் இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிக ரன்னாக இது பார்க்கப்படுகிறது.
#4) தில்ஷன் 160 (2012)
இந்த வரிசையில் நான்காவது இடத்திற்கும் தில்ஷன் சொந்தக்காரர் ஆகிரார். இந்த முறை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு தொடரில் வெற்றி பெறும் அணி தான் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் என்ற நிலை இருந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தில்ஷனின் அபார ஆட்டத்தால் 320 ரன்கள் குவிதது. அதில் தில்ஷன் மட்டும் அணியின் ஸ்கேரில் பாதியளவு குவித்திருந்தார். அப்படியிருந்தும் விராத்கேலியின் அதிரடியால் அந்த போட்டியை இந்திய அணி வென்றது. தில்ஷன் அதிக ரன்கள் குவித்த இரு போட்டிகளிலும் இலங்கை. அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#3) உபுல் தரங்கா 174* (2013)

இந்த வரிசையில் மூன்றாவது இடம் வகிப்பவர் உபுல் தரங்கா. இந்தியா, முற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள்பங்கேற்ற முத்தரப்பு போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் உபுல் தரங்காவின் அபார ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 348-1 ரன்கள் குவித்திருந்தன. இதில் தரங்கா அடித்த 174 ரன்கள் தான் அவரது ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ரன்னாகும். இதில் அடுத்து களமிறங்கிய இந்திய அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
#2) சனத் ஜெயசூர்யா ( 2000)

இந்த வரிசையில் ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் இலங்கை அணியினரே உள்ளனர். இவரைத் தெரியாத கிரிக்கெட் ரசிகரே இருக்க முடியாது. இலங்கை அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார் இவர். 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற கோகோ கோலா கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 299 ரன்கள் குவித்தது. இதில் ஜெயசூர்யா மட்டும் 189 ரன்கள் குவித்தார். அதன் பின் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
#1) செய்யது அன்வர் 194 ( 1997 )

12 வருட காலமாக ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்னாக இருந்தது செய்யது அன்வரின் 194 ரன்கள் தான். 1997 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 327 ரன்கள் குவித்தது. இதில் செயது அன்வர் அன்றைய காலகட்டத்தில் அதிகபட்ச ரன்னான 194 ரன்கள் குவித்தார். ஒருவேளை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் கண்டிப்பாக இரட்டை சதம் விளாசியிருப்பார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார் அவர். இது இந்திய அணிக்கு எதிராக மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே அதிகபட்ச ரன்னாக 12 ஆண்டுகள் எவராலும் முறியடிக்க முடியாததாக இருந்தது. இதனை சச்சின் டெண்டுல்கர் தான் 12 வருடங்கள் கழித்து 200 ரன்கள் அடித்து முறியடித்தார். இருந்தாலும் இந்த போட்டியில் செய்யது அன்வரின் 194 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன் ஆகும்.