லீட்ஸில் உள்ள ஹேண்டிங்லே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதிய 3வது ஆஸஷ் தொடரின் 5வது நாள் ஆட்டம் இறுதி வரை பரபரப்பாக சென்றது. பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து தனது அதிரடி ஆல்-ரவுண்டர் திறனை தொடர்ந்து வெளிபடுத்திய வண்ணம் உள்ளார்.
ஆட்டதின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளுக்கு 156 எடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து 5வது நாளில் களமிறங்கியது. ஜோ ரூட் ஆரம்பத்திலேயே ஹேசல்வுடால் வீழ்த்தப்பட்டார். பின் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினார். இவர் பென் ஸ்டோக்ஸுடன் சேர்ந்து 86 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடி போட்டியை இங்கிலாந்து வசம் மாற்றினார். ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை தொடர்ந்து ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது விக்கெட்டுகள் மள மளவென சரிந்ததால் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறிது நேரம் தடுத்து விளையாடினார். டீப் ஸ்கோயர் திசையில் பவுண்டரி விளாச முயன்ற போது கேட்ச் ஆனார் ஆர்ச்சர். இவரைத் தொடர்ந்து ஸ்டுவர்ட் பிராட்-வும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அந்த சமயத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 1 விக்கெட் மீதமிருந்த நிலையில் 73 ரன்கள் தேவைப்பட்டது. அயர்லாந்திற்கு எதிராக கடந்த தொடரில் 92 ரன்கள் விளாசிய ஜேக் லீச் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ்-க்கு சற்று பக்கபலமாக நின்று இங்கிலாந்திற்கு வெற்றியை தேடித் தந்தனர். நாம் இங்கு இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்திற்கு சாதகமாக மாறியதற்கான 5 காரணங்களைப் பற்றி காண்போம்.
#1 தவறான திசையில் ரன் அவுட் செய்து, ஸ்டோக்ஸை நிலைத்து விளையாட விட்டது.
120 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த ஓவரை பேட் கமின்ஸ் வீசியபோது பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். முதல் பந்தில் இரு ரன்களை கடந்தார். இரண்டாவது பந்து ரன் ஏதுமில்லை. மூன்றாவது பந்தில் ஒரு சிறப்பான ஷாட் மேற்கொண்டு சிக்ஸர் விளாசினார்.
4வது பந்தில் ஸ்டோக்ஸ் லெக் திசையில் அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். முதல் ரன் ஓடியபின் இரண்டாவது ரன் ஓட முயன்ற போது ஸ்டோக்ஸ் தடுமாறி விழுந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ஃபீல்டர்கள் ஜேக் லீச் சரியாக இருந்த பௌலிங் திசையை நோக்கி த்ரோ செய்தனர். பென் ஸ்டோக்ஸ் இந்த தவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
#2 ஜோஸ் ஹேசல்வுட் ஒரு ஓவரில் 19 ரன்களை அளித்தார்.
மேற்குறிப்பிட்ட நிகழ்விற்கு அடுத்த ஓவர் ஜோஸ் ஹேசல்வுட் பௌலிங் செய்ய வந்தார். அந்த சமயத்தில் பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்தார். ஜோ ரூட் போன்ற முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் வீசிய இந்த ஓவரின் முதல் 3 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.
ஹேசல்வுட் தனது வழக்கமான லென்த்-தை பௌலிங்கில் வெளிபடுத்த தவறியதால் அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாட தொடங்கினார். இவர் வீசிய முதல் பந்து ஓரளவு லென்த்தாக வந்தபோது ஸ்டோக்ஸ் பவுண்டரியாக மாற்றினார். அடுத்த பந்து ஃபுல் டாஷாக வீசப்பட்டது, ஸ்டோக்ஸ் அதனை ஸ்கூப் ஷாட்-க எதிர்கொண்டு ஸ்கொயர் லெக் திசையில் விளாசினார். மூன்றாவது பந்தும் சுமாரன லென்தில் வீசப்பபட்டதால் அதனை மற்றொரு சிக்ஸாக மாற்றினார் ஸ்டோக்ஸ். இந்த ஓவரில் 19 ரன்களை அளித்தார். இதன்பின் இங்கிலாந்து வெற்றி பெற 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.