#3 ஸ்டோக்ஸின் கேட்சினை தவறவிட்ட மார்கஸ் ஹாரிஸ்
ஆட்டம் படிப்படியாக இங்கிலாந்து வசம் மாறிக்கொண்டிருந்தது. பேட் கமின்ஸ் தனது இயல்பான பௌலிங்கை செய்து கொண்டிருந்தார். இவர் வீசிய முதல் பந்தை தேர்ட்மேன் திசையில் ஸ்டோக்ஸ் விளாசினார். அச்சமயத்தில் உலகில் உள்ள அனைத்து இங்கிலாந்து ரசிகர்களின் இதயமும் அதிகமாகவே துடித்திருக்கும். மார்கஸ் ஹாரிஸ் தேர்ட்மேன் திசையில் அந்த கேட்சை பிடிக்க ஓடினார். பந்தை பிடிக்க கை-யை நீட்டியபோது, தவறி கீழே விழுந்தது.
#4 சாதரண ரன் அவுட்-ஐ கோட்டை விட்ட நாதன் லயன்
இங்கிலாந்து வெற்றி பெற 8 ரன்கள் தேவைபட்டபோது இன்னிங்ஸின் 125வது ஓவரை நாதன் லயன் வீச வந்தார். இந்த ஓவரில் நாதன் லயன் வீசிய 3வது பந்தை சிக்ஸராக ஸ்டோக்ஸ் மாற்றினார்.
பின்னர் நாதன் லயன் வீசிய 5வது பந்தை ஸ்விப் ஷாட் விளாச ஸ்டோக்ஸ் முயன்றபோது பந்து பின்னால் இருந்த ஃபீல்டரிடம் சென்றது. அப்போது மறுமுனையில் இருந்த ஜேக் லீச் ரன் எடுக்க ஓடி வர முயன்றார். ஆனால் ஸ்டோக்ஸ் வேண்டாம் என்று கத்தினார். பந்து நேராக நாதன் லயனிடம் ரன் அவுட் செய்ய வீசப்பட்டது. ஆனால் லயன் தடுமாறியதில் அந்த ரன் அவுட் மிஸ் ஆனது. ஜேக் லீச் எவ்வித இடற்பாடுமின்றி கிரிஸை அடைந்தார்.
#5 ஆஸ்திரேலியாவின் தவாறன மேல்முறையீடு
நாதன் லயன் தடுமாறி ரன் அவுட் மிஸ் செய்த அடுத்த பந்தில் மீண்டுமொருமுறை அவருக்கு ஸ்டோக்ஸை அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. லயன் வீசிய அடுத்த பந்து நேராக ஸ்டோக்ஸ் பேடில் அடித்தது. ஸ்டோக்ஸின் அதிர்ஷ்டத்தால் நடுவர் அவுட் வழங்கவில்லை. ஆஸ்திரேலியா ஏற்கனவே தனக்கிருந்த ஒரு மேல்முறையீட்டை தவறாக பயன்படுத்தியதால், அந்த அணியால் இந்த விக்கெட்டிற்கு மேல்முறையீடு கோர முடியவில்லை.