கிரிக்கெட் தொடங்கியது முதல் தற்போது வரை பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் மற்றும் பல பேட்ஸ்மேன்கள் தங்களின் தாய் நாட்டிற்காக ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களை ஒரு பெரும் மேதாவிகளாக செதுக்கி கொண்டனர்.
சில வீரர்கள் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மட்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன் குவிப்பில் ஈடுபடுவர். நாம் இங்கு ஒரு அணிக்கு எதிராக மட்டும் ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாப் 5 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி காண்போம். இதில் குறிப்பிடப்படுபவர்கள் ஒரு அணிக்கு எதிராக 7 அல்லது அதற்கு மேலான சதங்களை விளாசிய வீரர்கள் ஆவார்கள்.
#5 சையத் அன்வர் - 7 (vs இலங்கை)
முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான இவர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை டாப் ஆர்டரில் தனது தாய் நாட்டிற்காக வெளிபடுத்தியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் பொக்கிஷம் போல் அனைவராலும் பார்க்கப்பட்டனர்.
சையத் அன்வரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் இலங்கைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இந்த அணிக்கு எதிராக மட்டும் 7 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
இடதுகை பேட்ஸ்மேனான இவர் இலங்கைக்கு எதிராக 52 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 44.85 சராசரியுடன் 2198 ரன்களை குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் அடங்கும்.
#4 சனந்த் ஜெயசூர்யா -7 (vs இந்தியா)
தற்கால இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முன்மாதிரியான ஓடிஐ கிரிக்கெட் வீரராக ஜெயசூர்யா திகழ்கிறார். பவர்பிளே ஓவரில் அதிரடி பேட்டிங்கையும், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பௌலிங்கையும் ஜெயசூர்யா வெளிபடுத்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க ஏற்ற அணியாக ஜெயசூர்யாவுக்கு அமைந்தது இந்திய அணி. இவர் இந்தியாவிற்கு எதிராக மட்டும் 7 ஓடிஐ சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களான 189 இந்தியாவிற்கு எதிராக குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயசூர்யா இந்தியாவிற்கு எதிராக 89 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 36.23 சராசரியுடன் 2899 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் அடங்கும்.
#3 ஆரோன் ஃபீன்ச் - 7 (vs இங்கிலாந்து)
ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய ஒருநாள் அணியின் கேப்டன் ஆரோன் ஃபீன்ச் ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக அதிகபடியான போட்டிகளில் டேவிட் வார்னருடன் டாப் ஆர்டரில் பார்ட்னர் ஷீப் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆரோன் ஃபின்ச்-ற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க மிகவும் சாதகமான அணியாக இங்கிலாந்து உள்ளது. இந்த அணிக்கு எதிராக இவர் 7 சதங்களை ஓடிஐ கிரிக்கெட்டில் விளாசியுள்ளார்.
ஆரோன் ஃபீன்ச் இங்கிலாந்திற்கு எதிராக 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 50.12 சராசரியுடன் 1253 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் அடங்கும்.
#2 விராட் கோலி - 8 (vs ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை)
விராட் கோலி ஏற்கனவே தன்னை ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துவிட்டார் மற்றும் பல சாதனைகளை புரிந்து வருகிறார். இவரது புள்ளிவிவரங்களை பார்க்கும் போது கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
விராட் கோலி உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்கால தலைமுறையில் முன்னணி பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க ஏற்ற அணியாக தேர்வு செய்த அணிகள் - ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை. இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் தலா 8 சதங்களை விளாசியுள்ளார்.
விராட் கோலி தனது இளம் வயதிலேயே இந்த சிறப்பான மைல்கல்லை அடைந்து விட்ட காரணத்தால் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவில்லை. காரணம் அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிவார் என்பதால் தான்.
#1 சச்சின் டெண்டுல்கர் - 9 (vs ஆஸ்திரேலியா)
சச்சின் டெண்டுல்கரின் பெயர் இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியப்படும் வகையில் இல்லை. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய சாதனைகள் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பட்டிலே உள்ளது.
ஆஸ்திரேலிய அணி 2000 முதல் 2008 ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்தன. இந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது பெரும்பாலான சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையே இப்பதிவை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது.
மேலும் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 8 ஓடிஐ சதங்களை விளாசியுள்ளார்.
இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 71 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 44.59 சராசரியுடன் 3077 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 அரைசதங்கள் மற்றும் 9 சதங்கள் அடங்கும்.