சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் திறமை மிக மிக முக்கியம். அதே சமயத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் ஆகும். திறமை இருந்தாலும் 35 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் உடல் சற்று பொறுமையாக தான் செயல்படும். இளம் வயதில்விளையாடிய மாதிரி வேகமாக செயல்பட முடியாது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் 35 வயதிற்கு மேல் ஆகியும் நல்ல உடல் ஆரோக்கியமும், சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் பட்டியலை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.
#5) இமரான் தாகிர்:
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இமரான் தாகிர். இவர் தென் ஆப்பிரிக்க அணியின் மிக முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு தற்போது வயது 39 ஆகிவிட்டது. இந்த வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விளையாடி வருகிறார் இம்ரான் தாகிர். எனவே இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
#4) ஹாசிம் அம்லா:
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாஷிம் அம்லா. இவர் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ஆவார். சமீபத்தில் கூட குறைந்த போட்டிகளில் 7000 ரன்களை அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை இவர் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை விளாசிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இவருக்கு தற்போது வயது 35 ஆகிவிட்டது. இந்த வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
#3) முகமது ஹபீஸ்:
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ். இவர் பாகிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பாக இவர் தொடர்ந்து அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தால். ஆனால் தற்போது கடந்த ஒரு வருடமாக சிறப்பாக விளையாடி வருவதால் தொடர்ந்து அணியில் இடம் பெற்று கொண்டிருக்கிறார். இவருக்கு வயது 38 ஆகிவிட்டது. இந்த வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விளையாடிவருகிறார். எனவே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் முகமது ஹபீஸ்.
#2) ஆன்டர்சன்:
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவருக்கு வயது 36 ஆகிவிட்டது. ஆனால் இந்த வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விளையாடி வருகிறார். சமீபத்தில்கூட இவரும், ஸ்டூவர்ட் பிராட் சேர்ந்து 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளனர். எனவே இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
#1) மகேந்திர சிங் தோனி:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு பலபோட்டிகளில் கேப்டனாக இருந்து பல கோப்பைகளை வென்ற தந்தவரும் இவர்தான். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு வயது 37 ஆகிவிட்டது.ஆனால் இந்த வயதிலும் மிக வேகமாக ரன் ஓடுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்கிறார். எனவே இந்த வயதிலும் சிறப்பாக விளையாடி வரும் தோனி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.