கிரிக்கெட் என்பது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை மிகவும் சார்ந்துள்ள விளையாட்டாகும்.ஆட்டத்தின் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அணிய நல்ல நிலைமைக்கு கூட்டிச்செல்ல தேவைப்படுகிறது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்.ஒருவேளை முதலாவதாக பேட்டிங் செய்யும் அணியானது சிறந்த பார்ட்னர்ஷிப்பை கொண்டு ஒரு பெரிய இலக்கை எதிரணிக்கு எதிராக குவிப்பர்.கிரிக்கெட் உலகில் அவ்வாறான கடும் சவால் அளிக்கக்கூடிய தொடக்க ஜோடிகள் பற்றிய தொகுப்பினை அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும். இவர்களது ஆட்டத்தினால் பலமுறை அவர்களின் அணி வெற்றியை கண்டுள்ளது. ஒரு சிறந்த தொடக்கமே ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்க கூடிய காரணியாகவும் இருந்துள்ளது, இருந்தும் வருகிறது. அப்படிப்பட்ட தங்களது பணியை எவ்வாறு அவரவர் அணிகளுக்கு செய்து வெற்றியை தேடி தந்தது என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஆட்டத்தின் முதலாவதாக அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியின் வெற்றியை தீர்மானிப்பது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும். அனைத்து கால சிறந்த வீரராக முயலும் ஒருவர் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது முக்கியமான ஒரு கடமையாகும்.கிரிக்கெட் போட்டிகளில் சில பயங்கரமான தொடக்க ஜோடிகள் அவர்களது அணியை வழிநடத்தி சென்றுள்ளனர். ஹஷிம் ஆம்லா மற்றும் டி காக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் இணை , கார்டன் கிரானிட்ஜ் மற்றம் தேஷ்மன்ட்ஹேய்ன்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்திவ் ஹேய்டன் இணை , சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை உட்பட அனைத்து கால சிறந்த கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட ஜோடிகளை பற்றி இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த சிறந்த ஜோடிகளைப் பற்றி இனி காண்போம்.
5.ஹஷிம் ஆம்லா மற்றும் டி காக் கூட்டணி (Hashim Amla and De kock duo) :
தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.ஒரு சிறந்த துவக்க ஜோடிக்கு அணிக்கு கிடைக்காமல் தவித்துக்கொண்டு இருந்த காலத்தில் 2013-இல் ஒரு டி காக் என்னும் இளம் வீரருடன் இணை புரிய ஆரம்பித்தார் ஆம்லா.பின்னாளில் அந்த கூட்டணியே ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ஆகச்சிறந்த கூட்டணியாக உருவெடுத்தது.குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 282 என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போட்டியே இவர்களது பலமான கூட்டணிக்கு ஒரு சிறந்த சான்றாகும். இதுவே அவர்களது கூட்டணியில் உருவான அதிகபட்ச ரன்களாகும் மேலும்,.இது ஒட்டுமொத்த அளவில் ஒரு துவக்க ஜோடியின் நான்காவது அதிகபட்சமாகும்.
இந்த இடது கை வடது கை காம்போ ஒருநாள் போட்டிகளில் பற்பல சாதனைகள் புரிந்த வண்ணம் உள்ளன. டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் தற்போது அவர்களது அணியில் இல்லாத போதும் இவர்களின் பங்களிப்பு அதை மறைத்து அவர் இல்லாத குறையை நிரப்பியும் வருகின்றது. மேலும் 3919 ரன்களும் 48.38 என்ற ஆவ்ரேஜூம் இவர்களது கூட்டணியில் உருவான சாதனைகளாகும், இவர்கள் இருவரும் 83 முறை தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க ஜோடியாக களமிறங்கியுள்ளனர்.