2.ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா இணை (Rohit sharma and Dhawan ) :
இந்த இணைதான் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 பேட்டிகளின் தற்போதைய துவக்க ஜோடியாகும்.இந்திய ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஷேவாக் இணைக்கு அடுத்தப்படியாக வெற்றிகரமான இணையாகவே கருதப்படுகிறது.அதிக சதங்கள் அடித்த ஐந்து சிறந்த ஜோடிகளில்தலைசிறந்த இரண்டாவது ஜோடியாக ரோகித் - தவான் இணை உள்ளது.
2013 -இல் இந்த ஜோடி முதன்முறையாக இந்திய அணியின் துவக்கு ஜோடியாக களம் இறக்கப்பட்டனர்.இவர்கள் 88 போட்டிகளில் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டு 45.88 என்ற ஆவரேஜூடன் 3919 ரன்களையும் சேர்த்துள்ளனர்.பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த 210 ரன்கள் இவர்களது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.இவர்களது கூட்டணியில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 13 சதங்களும் 13 அரைசதங்களும் அடித்துள்ளனர்.
3.கார்டன் கீரினிட்ஜ் மற்றும் தேஷ்மன்ட் ஹேய்ன்ஸ் (Gordon greenidge and Desmond haynes) :
இந்த கீரினிட்ஜ் மற்றும் தேஷ்மன்ட் கூட்டணியானது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு பொற்கால கூட்டணியாக அமைந்தது. அதிகப்படியான ரன்களை குவித்து அணிக்கு சில வெற்றிகளை இருவரும் இணைந்து தந்துள்ளனர் அசுர வேகத்தில் ரன்களை இவர்களது கூட்டணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிகப்படியான வெற்றிகளை 52.58 என்ற ஆவ்ரேஜூம் குவித்துள்ளனர் ஒருநாள் போட்டிகளில் 1981ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக குவித்த 182 ரன்கள் இவர்களது கூட்டணியில் உருவான அதிகபட்ச ரன்களாகும். இந்த இணை தங்களது பார்ட்னர்ஷிப்பில் 15 சதங்கள் மற்றும் 25 அரைசதங்களை அடித்துள்ளனர்.இவர்கள் இருவரும் 103 முறை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க ஜோடியாக களமிறங்கியுள்ளனர்.
இன்றைய நாள் வரையிலும் இவர்களது கூட்டணியே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிரபல ஜோடிகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது மேலும் இந்த ஜோடியை அந்த அணிக்கு பொற்கால ஜோடியாகவும் அமைந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பல்வேறு வீரர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், இவர்களைப் போன்ற ஒரு சிறந்த தொடக்க ஜோடி இன்னும் அமையவில்லை.