2.மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஜோடி ( Mathew hayden and Adam Gilchrist ):
கிரிக்கெட் உலகில் மிகவும் அபாயகரமான ஜோடிகளில் ஒன்று ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் ஜோடி.. பந்தை சிதறடிக்கும் இந்த ஜோடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாக அமைந்தது உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போராடி அவர்களது நம்பிக்கையை உடைத்தெரிந்துள்ளது இந்த ஜோடி. 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர்களது பங்கு போற்றத்தக்கது இவர்கள் எதிரணி ரசிகர்களின் மனங்களை தங்களது அற்புதமான ஷாட்களால் கொள்ளையடித்துள்ளனர். இந்த வெற்றிகரமான கூட்டணியில் 5409 ரன்களும் 47.44என்ற சிறந்த ஆவ்ரேஜூம் இவர்கள் இணைந்து குவித்துள்ளனர். இந்த இணை தங்களது பார்ட்னர்ஷிப்பில் 16 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை அடித்துள்ளனர்.172 ரன்கள் குவித்ததே இவர்களது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.
ஆஸ்திரேலிய அணிக்காக 117 இன்னிங்சில் இவர்கள் தொடக்க ஜோடியாக களமிறக்கப்பட்டு பல்வேறு சாதனைகளை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு பல்வேறு தொடக்க வீரர்கள் களம் கண்டாலும் இதுபோன்ற ஒரு சிறந்த ஜோடியை இன்னும் காணவில்லை. தற்போது இந்தியாவில் உள்ள தவான் மற்றும் ரோஹித் ஜோடியை போன்று அந்த காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் ஜோடி தொடர்ந்து ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
1.சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை:
இந்திய அணிக்கு கிடைத்த ஆகச்சிறந்த அனைத்துகால தொடக்க ஜோடியாக சச்சின் மற்றும் கங்குலி இணை கருதப்பட்டது.இந்த ஜோடியானது இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடி மட்டுமல்லாது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் உலகின் தலைசிறந்த வெற்றிகரமான தொடக்க ஜோடியாகவும் உள்ளது.
சுமார் 176 முறை இந்திய ஒருநாள் போட்டிகளுக்காக இந்த தாதா மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் இணை ஆடியுள்ளது.இதில் 47.55 என்ற ஆவ்ரேஜூடன் உட்சபட்ச ரன்களான 8227 என்ற மலைக்கும் அளவிற்கு இந்த இணை சேர்த்துள்ளது.கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்த அணி சேர்த்த 258 ரன்கள் இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு தொடக்க ஜோடியின் உச்சகட்ட பார்ட்னர்ஷிப்பாக இன்றளவும் உள்ளது.மேலும் இவர்களது கூட்டணியில் உருவான 26 சதங்களும் 29 அரைசதங்களும் ஒருநாள் போட்டியில் செய்த மிகச்சிறந்த சாதனைகளாகும்.