தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பலமுறை ஆட்டத்தையே மாற்றியமைத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.அணியில் ஓப்பனிங் முதல் 7ம் இடம் வரை அனைத்து இடத்திலும் ஆடி வந்த தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டில் இந்திய அணியில் விக்கெட கீப்பராக இடம்பிடித்தார்.பின் தோனியிடம் தன் இடத்தை இழந்தார்.இருந்தாலும் இவர் இந்திய அணியில் அவ்வபோது இடம் பிடித்து வந்தார்.குறைவான ஆட்டங்களே ஆடினாலும் பல தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெறவைத்தார். அதில் சிறந்த 5 ஆட்டங்களை இங்கு காண்போம்.
#5) 2010 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி

தினேஷ் கார்த்திக் 2010ம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். அணியின் 15 பேரில் ஒருவராக இடம்பெற்ற இவரால் 11 பேரில் ஒருவராக இடம்பெற முடியவில்லை காரணம் இவர் ஓப்பனிங் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டதே .சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் சிறப்பாக ஆடியதனால் இவருக்கு லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சேவாக் காயம் காரணமாக விளையாடாததால் அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

டம்புலா வில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி தினேஷ் கார்த்திக் மற்றும் கம்பீர் களம் இறங்கினர்.இலங்கை அணியின் பந்துவீச்சை சமாலிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் கம்பீர் 15 ரன்களிலும், விராத் கோலி 28 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் இறங்கிய வீரர்கள் யாரும் சோபிக்காவிட்டாலும் தினேஷ் கார்த்திக் தனியாளாக போராடி 66 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் வேறு யாரும் 50 ரன்கள் கூட தொடவில்லை.50ஓவர் முடிவில் இந்திய அணி 268 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.சிறப்பான ஆடிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
#4) 2007 இந்தியா-வங்கதேசம் 2வது டெஸ்ட் போட்டி

2007 ம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார் கார்த்திக். முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்-ல் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 387 ரன்கள் குவித்தது.சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி சதமும், கேப்டன் டிராவிட் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தனர். இருப்பினும் இந்திய அணியால் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை டிரா மட்டுமே செய்ய முடிந்தது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் துவங்கியது.இதில் முதல் இன்னிங்ஸ்ல் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினர்.ஸ்கோர் 175 ஆக உள்ளபோது தினேஷ் கார்த்திக் 82 ரன்களிள் ரிடெயர்டு ஹர்ட் ஆனர்.பின்பு களம் இறங்கிய கேப்டன் ராகுல் டிராவிட் வாசிம் ஜாபருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய ஜாபர் சதம் விளாசினார்.அவர் 138 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 326 ரன்கள் எடுத்திருந்தது .சச்சின் மற்றும் டிராவிட் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் களமிறங்கிய இந்திய வீரர் டிராவிட் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.பின்னர் சச்சின் டெண்டுல்கரும் சதமடித்தார்.சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்ல் முதல் 4 வீரர்கள் சதமடித்தது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.இறுதியில் இந்திய அணி 610 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டிக்லேர் செய்தது.பின்னர் களமிறங்கிய வங்கதேச வீரர்களால் களத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸ்ல் 118 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 253 ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்த போட்டி தினேஷ் கார்த்திக் வாழ்வில் மறக்க முடியாத போட்டியாகும்.இந்த போட்டியில் இவர் அடித்த 129 ரன்னே சர்வதேச போட்டியில் இவரது அதிகபட்ச ரன்கள் ஆகும்.
#3) 2007 இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 2வது ஒருநாள் போட்டி

மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது தான் முக்கிய வீரர்கள் அணிக்காக விளையாடாவிட்டாலும் 2007 ல் அணி மிகுந்த பலத்துடன் இருந்தது.2007 ல் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்-ல் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் யாராலும் இரட்டை இலக்க ரன்னை கூட தொட முடியவில்லை. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து ஆடினார்.கடைசியில் அவரும் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியில் 7 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்கிலேயே பெவிலியன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 190 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இறுதியில் அந்த அணி 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.அணியில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் தான் அன்றைய நாளின் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.
#2)இந்தியாவின் முதல் டி20 போட்டி

கிரிக்கெட் வரலாற்றில் முதலில் டெஸ்ட் போட்டி மட்டுமே இருந்தது. நாளடைவில் 60 ஓவர் போட்டியும் பின்னர் அது 50 ஓவர் போட்டியாகவும் குறைக்கப்பட்டது.2006 ம் ஆண்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய அணி தனது முதல் அறிமுக டி20 போட்டியில் தென்னாப்ரிக்க அணியை எதிர்கொண்டது. 2006 ம் ஆண்டில் தென்னாப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது.
ஜோகெண்ஸ்பெர்க்- ல் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் சச்சின் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் சேவாக் 34 ரன்களிலும் தினேஷ் மோங்கையா 38 ரன்களிலும் தோனி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.கடைசியில் இந்திய அணி இறுதி 2 ஓவர்களுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது .தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 19.5 ஓவரில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். தினேஷ் கார்த்திக் தற்போது டி20 போட்டிகளில் சிறந்த பினிசர் என்பது நாம் அறிந்ததே. அவர் இந்தியாவின் முதல் டி20 போட்டியிலே பினிசராக இருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் இந்தியாவில் முதல் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்ற பெருமை இவரையே சாரும்.
#1) 2018 நிதாஷ் டிராபி இறுதிப்போட்டி

இந்திய அணி இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி இறுதிப்போட்டியில் போராடி வென்றது நம் அனைவருக்கும் தெரியும். அன்றையதினம் இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றவர் தினேஷ் கார்த்திக்.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி வீரர் தவான் 10 ரன்னிலும் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் ரோகித் சர்மா 56, ராகுல் 24,பாண்டே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி கடைசி 3 ஓவர்களுக்கு 35 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது பந்து வீசிய முஷ்டபிசூர் ரகுமான் ஒருரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாண்டே விக்கெட்டினை எடுத்தார் .பின்னர் இந்திய அணிக்கு 2 ஓவருக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.கிட்டத்தட்ட இந்திய அணி தோற்றுவிட்டது என்று எண்ணிய ரசிகர்களின் நினைப்பை மாற்றினார் தினேஷ் கார்த்திக், அந்த ஓவரில் அவர் 22 ரன்கள் குவித்தார்.பின் இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சவுமியா சர்கார் வீசிய அந்த பந்தை சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். அவர் 8 பந்தில் 29 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்த முதல் வீரர் என்ற சாதனை இவரையே சாரும்.
இதில் ஏதேனும் ஆட்டங்கள் விடுபட்டிருப்பின் அதைக் கீழே கமென்ட் செய்யவும்.