தினேஷ் கார்த்திக்-ன் சிறந்த 5 ஆட்டங்கள்

Dinesh karthik struggled to find a place in Indian cricket
Dinesh karthik struggled to find a place in Indian cricket

#3) 2007 இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 2வது ஒருநாள் போட்டி

DK won the 'Man of The Match' award
DK won the 'Man of The Match' award

மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது தான் முக்கிய வீரர்கள் அணிக்காக விளையாடாவிட்டாலும் 2007 ல் அணி மிகுந்த பலத்துடன் இருந்தது.2007 ல் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்-ல் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் யாராலும் இரட்டை இலக்க ரன்னை கூட தொட முடியவில்லை. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து ஆடினார்.கடைசியில் அவரும் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியில் 7 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்கிலேயே பெவிலியன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

India won the match by 21 runs
India won the match by 21 runs

பின்னர் 190 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இறுதியில் அந்த அணி 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.அணியில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் தான் அன்றைய நாளின் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.

#2)இந்தியாவின் முதல் டி20 போட்டி

India played their very first T20 against Proteas
India played their very first T20 against Proteas

கிரிக்கெட் வரலாற்றில் முதலில் டெஸ்ட் போட்டி மட்டுமே இருந்தது. நாளடைவில் 60 ஓவர் போட்டியும் பின்னர் அது 50 ஓவர் போட்டியாகவும் குறைக்கப்பட்டது.2006 ம் ஆண்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய அணி தனது முதல் அறிமுக டி20 போட்டியில் தென்னாப்ரிக்க அணியை எதிர்கொண்டது. 2006 ம் ஆண்டில் தென்னாப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது.

ஜோகெண்ஸ்பெர்க்- ல் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் சச்சின் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் சேவாக் 34 ரன்களிலும் தினேஷ் மோங்கையா 38 ரன்களிலும் தோனி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.கடைசியில் இந்திய அணி இறுதி 2 ஓவர்களுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது .தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 19.5 ஓவரில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். தினேஷ் கார்த்திக் தற்போது டி20 போட்டிகளில் சிறந்த பினிசர் என்பது நாம் அறிந்ததே. அவர் இந்தியாவின் முதல் டி20 போட்டியிலே பினிசராக இருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் இந்தியாவில் முதல் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்ற பெருமை இவரையே சாரும்.

#1) 2018 நிதாஷ் டிராபி இறுதிப்போட்டி

நிதாஸ் ட்ரோபி கடைசி  சிக்ஸர்
நிதாஸ் ட்ரோபி கடைசி சிக்ஸர்

இந்திய அணி இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி இறுதிப்போட்டியில் போராடி வென்றது நம் அனைவருக்கும் தெரியும். அன்றையதினம் இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றவர் தினேஷ் கார்த்திக்.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி வீரர் தவான் 10 ரன்னிலும் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் ரோகித் சர்மா 56, ராகுல் 24,பாண்டே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி கடைசி 3 ஓவர்களுக்கு 35 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது பந்து வீசிய முஷ்டபிசூர் ரகுமான் ஒருரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாண்டே விக்கெட்டினை எடுத்தார் .பின்னர் இந்திய அணிக்கு 2 ஓவருக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.கிட்டத்தட்ட இந்திய அணி தோற்றுவிட்டது என்று எண்ணிய ரசிகர்களின் நினைப்பை மாற்றினார் தினேஷ் கார்த்திக், அந்த ஓவரில் அவர் 22 ரன்கள் குவித்தார்.பின் இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சவுமியா சர்கார் வீசிய அந்த பந்தை சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். அவர் 8 பந்தில் 29 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்த முதல் வீரர் என்ற சாதனை இவரையே சாரும்.

இதில் ஏதேனும் ஆட்டங்கள் விடுபட்டிருப்பின் அதைக் கீழே கமென்ட் செய்யவும்.

Quick Links