#2) ராபின் பீட்டர்சன்
இடது கை சுழல் பந்து வீச்சாளரான ராபின் பீட்டர்சன் தென்னாப்ரிக்க அணி 2011 உலககோப்பை தொடரில் பல போட்டிகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவரின் அதிரடி ஆட்டத்தாலேயே ஆந்த அணி இந்தியாவை வீழ்த்தியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராபின் பீட்டர்சன் 4,6,2 மற்றும் 4 என ரன்கள் விளாசி நான்கே பந்துகளில் அணிக்குவெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் அவர் தென்னாப்ரிக்க அணியில் நீண்ட நாள் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்ரான் தாகீரின் சிறப்பான பந்து வீச்சினால் அதன் பின் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அந்த 2011 உலககோப்பை தொடருக்கு பின் இவர் ஐபிஎல் தொடரிலும் நல்ல ஏலத்திற்கு போனார். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 ஆம் ஆண்டில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வினை அறிவித்தார்.
#1) தினேஷ் கார்த்திக்
இவரைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் அணியில் தனக்கென சரியான இடம் கிடைக்காமல் தவித்தார் தினேஷ் கார்த்திக். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஷ் டிராபி தோடரின் இறுதிப் போட்டியில் இவரது ஆட்டத்தை எவராலும் மறக்க முடியாது. கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய இவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைப்பார். அதிலும் அந்த கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையைக் கைப்பற்றி கொடுத்ததன் மூலம் இவர் இந்தியாவில் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தார்.
இருந்தால் தற்போதைய உலககோப்பை தொடரில் இடம்பிடித்துள்ள இவரால் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.