கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் களமிறங்கும் அனைத்து வீரர்களுக்கும் பவுண்டரிகள் விளாச வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அவர்கள் நினைக்கும் எல்லா பந்துகளும் அவர்களுக்கு பவுண்டரிகளாக கிடைப்பதில்லை. நவீன கால கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் டி20 போட்டிகளில் களமிறங்கும் அனைத்து வீரர்களும் பவுண்டரிகளை அடித்து குவிப்பார்கள். தற்போது இருக்கும் நிலையில் ஒரு பந்துவீச்சாளரின் ஓவரில் வரிசையாக 2 அல்லது 3 சிக்சர்கள் வரிசையாக ஒரு பேட்ஸ்மேன் அடிப்பதே அரிது தான். ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 6 வீரர்கள் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியுள்ளனர். அவர்களில் டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) சர் கிர்பீல்ட் சோபர்ஸ் - 1968
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக முதல்தர போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகிறார் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான கிர்பீல்ட் சோபர்ஸ். இவர் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல்தர போட்டியில் நோட்டியாங்கம் ஷிரி அணியின் சார்பாக இந்த சாதனையை படைத்தார். இதற்க்கு முன்பு வரை கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் 34 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து வரலாற்றில் தனது பெயரை பதித்தார் கிர்பீல்ட் சோபர்ஸ்.
#4) ரவி சாஸ்திரி - 1985
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்த பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். கிர்பீல்ட் சோபர்ஸ் படைத்த இந்த முதலாவது சாதனையை அதன் பின்னர் 16 ஆண்டுகள் வரை எந்த வீரரும் தொடவில்லை. இறுதியில் 1984 ஆம் ஆண்டு இந்திய அணியின் ரவி சாஸ்திரி 6 சிக்சர்கள் விளாசி இந்த பட்டியலில் இரண்டாது வீரராக தனது பெயரை பதிவு செய்தார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி பரோடா அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை அணியை சேர்ந்த ரவி சாஸ்திரி பரோடா அணியின் திலக் ராஜ் ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அதே போட்டியில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
#3) கிப்ஸ் - 2007
சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான கிப்ஸ். அதுவும் இவர் இந்த சாதனையை படைத்தது 2007 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில். இந்த சாதனையை படைத்ததன் மூலம் அப்போதைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் இவர்.இதுவரை ஒருநாள் போட்டிகளில் இவர் படைத்த இந்த சாதனையை எவராலும் நெருங்க முடியவில்லை.
#2) யுவராஜ் சிங் - 2007
இந்த பட்டியலில் இதுவரை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத சாதனை இதுதான். 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரானது முதல்முறையாக துவங்கப்பட்டது. அதில் இந்திய அணியின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சூப்பர் சிக்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது அதில் யுவராஜ் களத்தில் இருக்கும்போது இங்கிலாந்து அணியின் ஃபின்டாப் அவரை சீண்டிவிட்டு கோபப்படுத்திவிட்டு செல்வார். இதன் விளைவாக அவர் மீதுள்ள கோபத்தை யுவராஜ் அடுத்த ஓவரை வீசிய ப்ராட் ஓவரில் காட்டுவார். அந்த ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். அதுமட்டுமல்லாமல் அதே போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் விளாசி டி 20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
#1) அலெக்ஸ் ஹேல்ஸ் - 2015
இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் இந்த பட்டியலில் 2015 ஆம் ஆண்டு இணைந்தார். இவர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் டி20 ப்ளாஸ்ட் தொடரில் இந்த சாதனையை படைத்தார். ஆனால் இவர் இந்த சாதனையை சற்று வித்தியாசமான முறையில் படைத்துள்ளார். நோட்டியாங்கம் ஷிரி அணி சார்பாக களமிறங்கிய இவர் வேர்விக்க்ஷிரி அணியின் வீரர் ரான்கின் வீசிய 11 வது ஒவரின் நான்காம் பந்துமுதல் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். அதன் அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டிரைக்-ல் வந்த இவர் தொடர்ச்சியா 3 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் இவர் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் விளாசினார். ஆனால் இதனை படைக்க இவர் இரண்டு ஓவர்களை எடுத்துக்கொண்டார்.