டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர்கள் 

ரிஷாப் பண்ட்
ரிஷாப் பண்ட்

இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கருதப்படும் ரிஷாப் பண்ட் இந்திய அணிக்காக வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். ஆனால் இப்போதே இரண்டு சதங்களுடன் பல சாதனைக்கு சொந்தமாகியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் செப்டம்பர் மாதம் 2018ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் சதம் விலாசிய பண்ட், உலகில் இளம் வயதில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார். 2007 ஆம் ஆண்டு தோனி இதே மைதானத்தில் அடித்த 92 ரன்களையும் கடந்தார் பண்ட்.

21 வயதான இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பண்ட் அடித்த ரன்களை விட அதிகமாக அடித்த வீரர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

குறிப்பு: விஜய் மஞ்சரேக்கர் அடித்த 189* ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர் ஒரு பகுதி நேர விக்கெட் கீப்பர் என்பதனால்.

#5 மகேந்திர சிங் தோனி - 148 எதிரணி பாகிஸ்தான்(பைசலாபாத்), 2006

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

தோனி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்நிய மண்ணில் 2006ம் நடைபெற்ற ஆட்டத்தில் 148 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் ஒரே ரன்களை எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் இவர் அடித்த 148 ரன்கள் பெரிதாக எல்லோராலும் பேசப்பட்டது. இவர் அடித்த அந்த டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்ததால் பெரிதாக எல்லோருக்கும் நினைவில் இருக்காது.

2005/2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 588 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அப்ரிடி 128 பந்துகளில் 156 ரன்கள் எடுத்தார். 236 ரன்களுக்கு 2 விக்கெட் என்று சிறப்பாக ஆடி வந்த இந்தியா திடீரென விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது. 281/5 என்ற ரன்கள் இருந்தபோது தோனி மற்றும் இர்பான் பதான் களத்தில் இருந்தனர். பாலோவ் ஆனை தவிர்க்க 107 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வழக்கம்போல் அதிரடியாய் ஆடி 93 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் இந்தியா 603 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அடித்த இமாலய கணக்கை தாண்டியது. இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பதான் 90 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#4 நயன் மோங்கியா - 152 எதிரணி ஆஸ்திரேலியா (டெல்லியில்), 1996

நயன் மோங்கியா
நயன் மோங்கியா

இந்திய அணிக்காக சிறப்பாக குறிப்பிடும் அளவுக்கு செயல்பட்ட விக்கெட் கீப்பர் என்றால் நயன் மோங்கியாவும் அடங்குவார். பேட்டிங்கில் இவரது சராசரி மிகக்குறைவே. 68 இன்னிங்சில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். இவரது சராசரி வெறும் 24.03 ஆகும். டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 182 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க வீரராக களமிறங்கிய மோங்கியா இரண்டாவது விக்கெட்டுக்கு கங்குலியுடன் ஜோடி சேர்ந்து 131 ரன்கள் எடுத்தனர். கங்குலி ஆட்டமிழந்தவுடன் மற்ற வீரர்களும் சரசரவென ஆட்டமிழக்க தொடங்கினர்.

இருந்தாலும் மற்றொரு பக்கம் நிதானமாக ஆடிய மோங்கியா 366 பந்தில் 152 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 18 பௌண்டரிகள் அடங்கும். அடுத்த இன்னிங்சில் 234 ரங்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா 55 ரன்களை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது இந்தியா. இரண்டாம் இன்னிங்சில் மோங்கியா டக் அவுட் ஆகினார் என்பது கூடுதல் தகவல்.

#3 ரிஷாப் பண்ட் - 159* எதிரணி ஆஸ்திரேலியா(சிட்னி), 2019

ரிஷாப் பண்ட்
ரிஷாப் பண்ட்

ரிஷாப் பண்ட் சிட்னி மைதானத்தில் அடித்த 159* ரன்களே டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பரால் அடிக்கப்பட்ட 3 வது அதிகபட்சமானது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களின் பந்து வீச்சை சமாளிப்பது சற்றே கடினம் தான். பண்ட் களத்தில் இறங்கும் பொது இந்திய அணி 329/5 என்ற நல்ல நிலைமையில் இருந்தது. எதிரே இவருக்கு துணையாக நின்றது இந்திய அணியின் புதிய சுவர் புஜாரா. ஆரம்பத்தில் பொறுமையை கையாண்ட பண்ட், ஒரு கட்டத்தில் அதிரடியாய் ரன்கள் சேர்க்க துவங்கினார். 189 பந்துகளில் 159* ரன்கள் அடித்த இவர், ஒரு சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகள் விளாசினார்.

இவர் அடித்த சதம் தான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பரால் அடிக்கப்பட்ட முதல் சதம். இதற்கு முன் அதிக பட்சமாக அடிலெய்டு மைதானத்தில் 1967 ஆம் ஆண்டு பாரூக் என்ஜினீயர் 89 ரன்கள் எடுத்ததே அதிகம். 21 வயதான இவர் இச்சதத்தின் மூலம் 12 ஆண்டிற்கு முன் தோனி நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.

#2 புதி குண்டேரன் - 192 எதிரணி இங்கிலாந்து(மெட்ராஸ்), 1964

புதி குண்டேரன்
புதி குண்டேரன்

1960 களில் பாரூக் என்ஜினீயர் உடன் விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு போட்டி போட்டவர் புதி குண்டேரன். இந்தியாவிற்காக 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார் மற்றும் பந்துவீச்சிலும் முதல் ஓவர் வீசினார். இந்திய அணி இந்த போட்டியில் நான்கு சூழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

இவரது கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1964 ஆம் ஆண்டு மெட்ராஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். பாரூக் என்ஜினீயர் காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகியதால் புதி குண்டேரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக இப்போட்டியில் களமிறங்கிய குண்டேரன், இதற்கு முந்தய இரண்டு போட்டிகளில் 10 மற்றும் 11வது வீரராக இறங்கினார். புதி குண்டேரன் எடுத்த 192 ரன்களே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாகும். இதே போட்டியில் எதிரணியின் 6 விக்கெட்கள் விழ காரணமாகவும் இருந்தார்.

#1 மகேந்திர சிங் தோனி - 224 எதிரணி ஆஸ்திரேலியா (சென்னை), 2013

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

இந்த பட்டியலில் முதல் இடம் வகிப்பது மகேந்திர சிங் தோனி, 2013 ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அடித்த 224 ரன்களே ஒரு இந்திய வீக்கெட் கீப்பரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ரன் ஆகும். உலக அளவில் இது 4வது இடம் பிடிக்கிறது. இவருக்கு முன் இலங்கையை சேர்ந்த சங்கக்கரா மற்றும் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ஆண்டி பிளார் உள்ளனர்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்தியாவிற்கு புஜாராவும் சச்சினும் நல்ல பார்ட்னெர்ஷிப் போட்டனர். இருவரின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கினார் தோனி. அப்போது இவருடன் களத்தில் நின்றவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. பொறுமையாக விளையாடி சதம் அடித்தார் கோஹ்லி. மறுமுனையில் இருந்த தோனி அதிரடியாய் ஆடி 265 பந்துகளில் 224 ரன்கள் எடுத்து தன் விக்கெட்டை இழந்தார். இதில் 24 பவுண்டரியும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்சில் 572 ரன்கள் எடுத்து.

இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.சொற்ப இலக்கான 50 ரன்களை சுலபமாக அடித்த இந்தியா இப்போட்டியில் வென்றது. ஆட்டநாயகன் விருதை தோனி தட்டிச்சென்றார்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications