#2 புதி குண்டேரன் - 192 எதிரணி இங்கிலாந்து(மெட்ராஸ்), 1964
1960 களில் பாரூக் என்ஜினீயர் உடன் விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு போட்டி போட்டவர் புதி குண்டேரன். இந்தியாவிற்காக 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார் மற்றும் பந்துவீச்சிலும் முதல் ஓவர் வீசினார். இந்திய அணி இந்த போட்டியில் நான்கு சூழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
இவரது கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1964 ஆம் ஆண்டு மெட்ராஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். பாரூக் என்ஜினீயர் காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகியதால் புதி குண்டேரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக இப்போட்டியில் களமிறங்கிய குண்டேரன், இதற்கு முந்தய இரண்டு போட்டிகளில் 10 மற்றும் 11வது வீரராக இறங்கினார். புதி குண்டேரன் எடுத்த 192 ரன்களே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாகும். இதே போட்டியில் எதிரணியின் 6 விக்கெட்கள் விழ காரணமாகவும் இருந்தார்.
#1 மகேந்திர சிங் தோனி - 224 எதிரணி ஆஸ்திரேலியா (சென்னை), 2013
இந்த பட்டியலில் முதல் இடம் வகிப்பது மகேந்திர சிங் தோனி, 2013 ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அடித்த 224 ரன்களே ஒரு இந்திய வீக்கெட் கீப்பரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ரன் ஆகும். உலக அளவில் இது 4வது இடம் பிடிக்கிறது. இவருக்கு முன் இலங்கையை சேர்ந்த சங்கக்கரா மற்றும் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ஆண்டி பிளார் உள்ளனர்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்தியாவிற்கு புஜாராவும் சச்சினும் நல்ல பார்ட்னெர்ஷிப் போட்டனர். இருவரின் விக்கெட் வீழ்ந்த பின் களமிறங்கினார் தோனி. அப்போது இவருடன் களத்தில் நின்றவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. பொறுமையாக விளையாடி சதம் அடித்தார் கோஹ்லி. மறுமுனையில் இருந்த தோனி அதிரடியாய் ஆடி 265 பந்துகளில் 224 ரன்கள் எடுத்து தன் விக்கெட்டை இழந்தார். இதில் 24 பவுண்டரியும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்சில் 572 ரன்கள் எடுத்து.
இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.சொற்ப இலக்கான 50 ரன்களை சுலபமாக அடித்த இந்தியா இப்போட்டியில் வென்றது. ஆட்டநாயகன் விருதை தோனி தட்டிச்சென்றார்.