தற்பொழுது டி20 கிரிக்கெட் தொடர்கள் உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தங்களுக்கென ஒரு டி20 தொடர்களை வைத்துள்ளது. முதன்முதலாக இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் லீக் என ஆரம்பிக்கப்பட்டது.நாளடைவில் மேற்கிந்தியத் தீவுகள் ( சீ.பி.எல்), ஆப்கானிஸ்தான் (ஏ.பி.எல்), வங்கதேசம் (பி.பீ.எல்), பாகிஸ்தான் (பி.எஸ்.எல்) என டி20 தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் நடைபெற்றுவருகிறது.
எம்ஜான்ஸி என்ற டி20 தொடர் தற்பொழுது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த டி20 லீக்குகள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை உலகிற்கு வெளிபடுத்தவும், குறிப்பாக அதிக பணம் சம்பாதிக்கவும் உதவுகிறது.சிறந்த ஆட்டத்திறன் உள்ள வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்படுகின்றனர்.கிரிக்கெட் வீரர்கள் டி20 தொடர்களை மிகவும் விரும்பி விளையாடுகின்றனர்.மேற்கிந்தியத்தீவுகள் நாட்டின் வீரர்கள் சர்வதேச போட்டிகளை விட டி20 லீக்குகளைதான் அதிகம் விரும்புகின்றனர்.ஏனேனில் அதிக பணம் சம்பாதிக்க டி20 தொடர் மட்டுமே சிறந்த வழியாகும்.
டி20 தொடர்களின் மூலம் அதிக வருவாயும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவையும் பெற உதவுகிறது.டி20 தொடர்கள் அந்தந்த நாடுகளில் வருடத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் நடைபெறும்.பி.எஸ்.எல் , பி.பீ.எல் , பி.பி.எல் மார்ச் வரையிலும், ஐ.பி.எல் மே மாத வரையிலும் நடைபெறும்.ஐ.பி.எல்லிற்குப் பிறகு விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட் மற்றும் சி.பி.எல் நடைபெரும். சி.பி.எல் நிறைவடைந்த பிறகு ஏ.பி.எல், எம்ஜானஸி சூப்பர் லீக், யுஏஇ டி20 எக்ஸ் ஆகிய டி20 தொடர்கள் நடைபெறும்.
இன்னும் தெரியாத நிறைய டி20 தொடர்கள் உள்ளன அவற்றுள் சிறந்த 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியலை நாம் இங்கு காண்போம்.
#5.விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட்
இங்கிலாந்து நாடுதான் முதன்முதலில் டி20 தொடர்களை இந்த நுற்றாண்டில் ஆரம்பித்து வைத்தது.இது ஐ.பி.எல் டி20 போல ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனி உரிமையாளர்கள் கொண்டுள்ள தொடராக இருக்காது.வங்கதேச பிரிமியர் லீக் தோன்ற காரணமாக இந்த டி20 தொடர் இருந்தது.இந்த டி20 முதலில் இங்கிலாந்து நாட்டு உள்ளுர் வீரர்களை மட்டுமே வைத்து விளையாடப்பட்டது.
மொத்தமாக இந்த டி20 தொடரில் 18 அணிகள் பங்கேற்கின்றனர்.18 அணிகளும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமாக பிரிப்பர்.ஒவ்வொரு மாகனத்திலும் 9 அணிகள் இருக்கும்.ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளை எதிர்கொள்ளும்.ஒருமாகணத்தில் ஒரு அணி மற்ற 6 அணிகளுடன் விளையாடும்.மீதியுள்ள 2 அணிகளுடன் ஒரு போட்டியை மட்டும் எதிர்கொண்டு விளையாடும்.பிறகு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.இந்த வருடம் விட்டாலிட்டி டி20 தொடர் ஜுலை 4ல் தொடங்கி செப்டம்பர் 15ல் முடிவடைந்தது.
இவ்வருட சீசனில் இறுதிப்போட்டியில் சசெக்ஸ் ஷார்க்ஸை வீழ்த்தி வர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை வென்றது லீசெஸ்டர்ஷைர் ஃபாக்ஸ் அணி அதிகபடியாக 16 சீசனில் விளையாடி 3 முறை சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.சிறந்த வெளிநாட்டு டி20 நட்சத்திர வீரர்களான பிராவோ,ராஷித் கான்,முஜிப் ரகுமான், ஆரோன் ஃபின்ச் போன்ற புது யுக வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த டி20 நிறைய வெளிநாட்டு வீரர்களை கவர்ந்தது, மற்றும் இங்கிலாந்து நட்சத்திர நாயகர்களுடன் விளையாடும் வாய்ப்பையும் பெற முடிகின்றது.உலகின் டி20 தொடர் புள்ளி பட்டியலில் இந்த டி20 லீக் 5வது இடத்தில் உள்ளது.