#4.கரீபியன் பிரிமியர் லீக்
சி.பி.எல் ஒரு வண்ணமயமான அதிரடி டி20 தொடராகும். மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங் ஸ்டைல் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.இந்த டி20 தொடரில் சில வித்தியாசமான விதிமுறைகள் கையாளப்படுகிறது.சூப்பர் ஓவரில் டாஸ் போட்டுதான் யார் முதலில் பேட்டிங் (அல்லது) பௌலிங் செய்வது என தேர்வு செய்யப்படும்.இந்த விதிமுறை மற்ற டி20 தொடரில் கிடையாது.
மற்றோரு விதிமுறை ஒரு அணியின் நிகர ரன்ரேட்(நெட் ரன்ரேட்) அந்த அணியின் பந்து வீச்சில் அளித்துள்ள ரன்களுடனும் சேர்த்தே கணக்கிடப்படும்.ஆறு அணிகள் பங்கு பெரும் சி.பி.எல்லில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிருதிப்போட்டியை விளையாடும்.மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் எலிமேனேட்டர் சுற்றினை விளையாடும்.அரையிருதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.அரையிருதியில் தோற்ற அணி எலிமேனேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.அதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடும் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும்.
இந்த சீசனில் டிரின்பாகோ நைட் ரெய்டர்ஸ் அணி இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி சேம்பியன் ஆனது. டிரின்பாகோ நைட் ரெய்டர்ஸ் அணி 6 சீசனில் 3 தடவை சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டிவ் ஸ்மித்,காலின் முன்றோ போன்றோர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உள்ளுர் வீரர்களுடன் இனைத்து விளையாடினர்.அவர்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் நாயகர்களான கெயில்,ரசல்,பிராவோ போன்றோரும் தங்கள் நாட்டு கிரிக்கெட் லீக்கில் விரும்பி விளையாடி அசத்தினர்.
#3.பாகிஸ்தான் சூப்பர் லீக்
பாகிஸ்தான் சூப்பர் லீக் மிக விரைவாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தம் கவணத்தில் ஈர்த்துள்ளது.3 சீசன் மட்டுமே நடைபெற்றுள்ள இந்த டி20 லீக்கில் ஏற்கனவே நிறைய அதிரடி ஆக்ஸன்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.6 அணிகள் இந்த டி20 லீக்கில் பங்குபெறும்.சி.பி.எல் டி20 லீக்கைப் போன்றே இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும். பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் 2-4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும்.
கடந்த சீசனில் ஸ்லாமபாத் அணி சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.3 சீசனில் 2 தடவை சேம்பியன் ஆகியுள்ளது. பெஷாவர் ஜால்மி இறுதி போட்டியில் தோற்று பின்னர் பி.எஸ்.எல் கோப்பையை தவறிவிட்டது.அடுத்த சீசனிற்கான ஏலம் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏ.பி.டிவில்லியர்ஸ், ஸ்டிவ் ஸ்மித், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த டி20 லீக்கில் வரும் சீசனில் விளையாட உள்ளனர்.இந்த டி20 லீக்கின் வளர்ச்சிக்கு இதுவே சான்றாகும்.
கடைசி சீசனில் ஜெஸன் ராய்,மெக்கல்லம் போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.வரும் சீசனில் இன்னும் சிறப்பாக இவர்களது ஆட்டத்திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.