#2.பிக் பேஸ் லீக்
இந்த டி20 லீக் இங்கிலாந்தின் டி20 பிளாஸ்டர் தொடரை போலவே அவ்வளவாக வெளிநாட்டு அணி வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்.ஆனால் கிரிக்கெடின் தறம் சிறப்பாக இருப்பதால் இந்த டி20 தொடர் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது.சி.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் இல் சிறந்த வீரர்கள் இருப்பர்.பிக்பேஸ் டி20 லீக்கில் ஆட்டத்திறன் மற்றும் அதன் வெளிப்பாடு அற்புதமாக உள்ளுர் அணி வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.ஒவ்வொரு போட்டியையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் போட்டியை மிக சுவாரஸ்யமாக எடுத்து செல்வார்கள்.
இந்த டி20 லீக்கானது அனுபவமில்லா வீரர்களின் ஆட்டத்திறனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி ஐ.பி.எல் போன்ற பெரிய டி20 லீக் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.உதாரணத்திற்கு டாரிசி ஷார்ட்,ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற பிபிஎல் டி20 லீக் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐ.பி.எல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்த டி20 லீக்கில் ஒரு அணியில் இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.ரஷீத் கான்,ஜெஸன் ராய், மெக்கல்லம்,பிராவோ போன்றோர் இந்த டி20 லீக்கின் முன்னணி வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் ஆவார்.
இந்த டி20 லீக்கிற்கு ஏலம் ஏதும் கிடையாது.தங்களுக்கு விருப்பமான வீரர்களை அந்தந்த அணிகள் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். 8 அணிகள் உள்ள இந்த டி20 லீக்கில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.கடந்த சீசனில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஹோபார்ட் அணியை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை வென்றது.பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 8 சீசனில் 3 சீசனில் வெற்றி வாகை சூடியுள்ளது.அடுத்த சீசன் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
#1.இந்தியன் பிரிமியர் லீக்
உலகின் தலைசிறந்த டி20 லீக் ஐ.பி.எல் ஆகும்.ஐ.பி.எல் தொடரானது உலகில் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்துள்ளது.இந்த டி20 தொடர் இந்திய இளம் வீரர்களை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.தற்போதைய இந்திய நட்சத்திர வீரர்களான சகால், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா,பூம்ரா போன்றோரை கண்டறிய இந்த டி20 தொடர் பெரிதும் உதவியது.
ஐ.பி.எல் டி20 தொடரானது இந்திய ரசிகர்கள் 2 மாத திருவிழா போல் கொண்டாடுவர்.கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வது ஐ.பி.எல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.ஹதராபாத் அணி கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது.இந்த டி20 லீக்கில் ஒவ்வோரு சீசனிற்கும் வீரர்களை மாற்றிக்கொள்ளலாம்.
வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், சுனில் நரைன்,கானே வில்லியம்சன் போன்ற வீரர்கள் ஐ.பி.எல் போட்டியை விரும்பி விளையாடுவர்.இந்த டி20 தொடரும் சி.பி.எல், பி.எஸ்.எல் போலவே இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும்.
அடுத்த சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதால் டிசம்பர் மாதம் ஏலம் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஐ.பி.எல் அணிகள் ஏற்கனவே தாங்கள் தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.ஐ.பி.எல் 2019 திருவிழா தற்பொழுது முதலே களைகட்ட தொடங்கியுள்ளது.அது இன்னும் சில மாதங்களுக்கு அப்படியே இருக்கும்.