கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் அதில் பங்கேற்கும் வீரர்கள் சராசரி உயரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் பந்துவீசும் திறனும் மேம்படும். உதாரணத்திற்கு தற்போதைய கிரிக்கெட் உலகில் தனது பந்துவீச்சினால் கலக்கி வரும் மிச்சேல் ஸ்டார்க் மற்ற வீரர்களை காட்டிலும் சற்று உயரமானவர். இதுவே இவரின் மின்னல் வேக பந்துவீசும் தன்மைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் உயரமாக இருப்பது அவர்களுக்கு சாதகமாக அமையாது. எனவே இந்த பட்டியலில் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களே இடம் பெற்றுள்ளனர். தற்போதைய இந்திய அணியில் உயரமானவராக கருதப்படுபவர் இஷாந்த் சர்மா தான் . அதைப்போல கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் உயரமானவராக கருதப்படும் டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#5) குர்ட்லி ஆம்ப்ரோஸ் ( 6 அடி 7 அங்குலம் )
மேற்கிந்திய தீவுகள் அணியானது தற்போது அவ்வளவாக சோபிக்கா விட்டாலும் அப்போதைய காலகட்டங்களில் தலைசிறந்த அணியாக விளங்கிவந்தது. அதற்கு காரணமே அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆம்ப்ரோஸ் மற்றும் வால்ஷ் போன்ற பந்துவீச்சாளர்களே. எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களும் இவர்களின் அசாத்திய பந்துவீச்சிற்ற்கு முன் தடுமாறிவிடுவர். அந்த அளவுக்கு அப்போதைய கிரிக்கெட் உலகையே இவர்கள் கலக்கி வந்தனர். இவர் சர்வேதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதிலும் 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இவர் வீழ்த்திய 7 விக்கெட்டுகளை எவராலும் மறக்க முடியாது. தனது பந்துவீச்சில் பேஸ், லென்ந்த் மற்றும் பௌன்சர் என பல விதங்களை காட்டி 80 மற்றும் 90'களில் விக்கெட்டுகளை வீழ்த்திவந்தார். இதன் மூலம் இவருக்கு 2011 ஆம் ஆண்டு ஐசிசி சார்பாக "ஹால் ஆப் ப்ம்ளே" விருதும் வழங்கி சிறப்பிக்க பட்டது. அப்போதைய காலகட்டங்களில் உயரமான வீரராக இவர் கருதப்பட்டார். இவர் உயரமாக இருந்ததே இவருக்கு பலமாக அமைந்தது. ஓய்வு பெற்ற பின்னரும் உடல் நிலையை அதே அளவுக்கு வைத்துக்கொள்வது இவரின் சிறப்பு.
#4) பீட்டர் ஜார்ஜ் ( 6 அடி 8 அங்குலம் )
ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரராக அறிமுகமாகி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் பீட்டர் ஜார்ஜ். இவரின் 6"8' உயரமே அனைவரையும் கவர்ந்தது. உயரத்திற்கு ஏற்றார் போல தனது பந்துவீச்சில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் இவர். முன்னாள் ஜாம்பவானான மெக்ராத் போல இவர் பந்துவீசுவதாக அனைவரும் கருதினர். ஆனால் இவரால் சர்வதேச போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இவர். அதிலும் குறிப்பாக இரட்டை சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டினை இவர் வீழ்த்தியது இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத கருதப்படுகிறது. அதன் பின் இவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. தற்போது இவர் தென் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவருகிறார்.
#3) பிரூஸ் ரீட் ( 6 அடி 8 அங்குலம் )
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான பிரூஸ் ரீட் 27 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 80களின் பிற்பாதி மற்றும் 90களில் இவர் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தார். பந்துவீச்சில் சிறந்து விளங்கிய இவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஓய்வு பெற்ற பின்னர் 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
#2) ஜோயல் கார்னெர் ( 6அடி 8 அங்குலம் )
மேற்கிந்திய தீவுகள் அணியில் மற்றுமொரு பிரபலமான பந்துவீச்சாளரான ஜோயல் கார்னெர் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். அந்த அணியின் போட்டி நடைபெறும் போது இவர் மட்டும் தனியாக தெரிவதன் மூலமே இவரின் உயரத்தை நாம் அறியலாம். உயரம் அதிகமாக உள்ளதன் காரணமாக இவர் அதிகமாக பௌன்சர் வீசுவதில் வல்லவர். இவரின் பௌன்சர்கள் பலரின் விக்கெட்டுகளை சாய்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் யாக்கர் பந்துகளை அந்த காலத்திலேயே அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 20 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
#1) முகமது இர்பான் ( 7 அடி 1 அங்குலம் )
பாக்கிஸ்தான் அணியை சேர்ந்த முகமது இர்பான் கிரிக்கெட் வீரர்களிலேயே மிகவும் உயரமான வீரராக கருதப்படுகிறார். ஐபிஎல் போட்டிகளிலும் 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக இவர் விளையாடியுள்ளார். தற்போதைய பாக்கிஸ்தான் அணியின் முக்கிய வீராக திகழும் இவருக்கு அணியில் நிரந்தர இடமில்லை. இவருக்கு ஏற்பட்ட பல காயங்களும் இவரை அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனதற்கு காரணமாகும். இருந்தாலும் சமீபத்தில் கரீபியன் டி20 தொடரில் 23 டாட் பந்துகள் வேசி புதிய சாதனையையும் படைத்தார் இவர்.