2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் இனைந்து கலக்கி வருகின்றனர். முகமது உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இங்கிலாந்திற்கு எதிராக ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகமது ஷமியின் அதிரடி வேகப்பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் சுமாரான இலக்கையும் அடிக்க முடியாத வாறு தடுத்து நிறுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியதால் முகமது ஷமி இந்திய அணியில் இடம்பிடித்து 3 போட்டிகளில் விளையாடி 2019 உலகக்கோப்பையகன் டாப் விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இவரது சிறப்பான வேகம் மற்றும் நுணுக்கமான இடத்தை சரியாக தேர்வு செய்து அதே இடத்தில் தொடரந்து ஒரே வேகத்தில் வீசும் திறமை உடையவர் முகமது ஷமி. உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமியின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இவரது அதிரடி மற்றும் அருமையான பந்துவீச்சை தவிர முகமது ஷமி அதிவேகமாக 100 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும், உலகின் இரண்டாவது பௌலராகவும் வலம் வருகிறார். முகமது ஷமி கிரிக்கெட் வாழ்வில் 66 போட்டிகளில் பங்கேற்று 135 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 முறை ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார்.
நாம் இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் டாப் 6 பௌலிங் திறன் பற்றி காண்போம்.
#6 இந்தியா vs பாகிஸ்தான், டெல்லி 2013 (9-4-31-1)
இத்தொடரின் முதல் இரு போட்டிகள் இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது போட்டியிலும் தனது பரம எதிரி பாகிஸ்தானை வென்று ஆறுதல் பெரும் நோக்கில் இருந்தது இந்தியா. மிகவும் குளிரான டெல்லியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 167 ரன்களில் சுருண்டது. ரசிகர்களிடையே கடும் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. ஏதேனும் மாயாஜாலம் நடந்து இந்தியா காப்பாற்றப்படுமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்திய பௌலர்கள் வெற்றி வாய்ப்பை இந்தியா வசம் திருப்பினர். முகமது ஷமி இப்போட்டியில் அறிமுகமாகி தொடர்ந்து சரியான லென்த் மற்றும் லைனில் பௌலிங்கை மேற்கொண்டார். இவர் 4 மெய்டன்களை இப்போட்டியில் எடுத்தார். அத்துடன் சாதரணமாக இவரது பௌலிங்கில் ரன் ஏதும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் எடுக்க இயலவில்லை.
இவரது அற்புதமான கட்டுபடுத்துதல் மூலம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே இவரால் வீழ்த்த முடிந்தது. ஆனால் ஓடிஐ கிரிக்கெட்டில் சிறப்பான பௌலிங்கை அறிமுக போட்டியிலேயே அளித்து அசத்தினார். தனது முதல் போட்டியில் ஒரு குறைவான ரன் இலக்கை எவ்வாறு கட்டுபட்த்துவது என்பதை கண்டு முகமது ஷமி சிறிது கூட தடுமாற்றத்தை வெளிகாட்டவில்லை.
இப்போட்டியில் இவரது பந்துவீச்சில் பேட்டில் பட்டு பல முறை கீழ்நோக்கி எட்ஜ் ஆன காரணத்தாலே இவரது ஓவரில் விக்கெட்டுகள் அவ்வளவாக விழவில்லை.
#5 இந்தியா vs நியூசிலாந்து, நேப்பியர் 2019 (6-2-19-3)
நேப்பியரில் ஷமியின் அதிரடி பந்துவீச்சு அவர் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற காரணமாக இருந்தது. இப்போட்டியில் ஆரம்ப ஓவர்களை வீசி மிகவும் குறைவான ரன்களில் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து 158 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை இந்தியா மிக எளிதில் 8 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையிலேயே சேஸ் செய்தது. ஷீகார் தவான் இப்போட்டியில் அரைசதம் அடித்தார்.
இத்தொடரின் முடிவில் முகமது ஷமி 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக வலம் வந்தார்.
#4 இங்கிலாந்து vs இந்தியா, பர்மிங்காம் 2014 (7.3-1-28-3)
இந்திய அணி இச்சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என இழந்திருந்த நிலையில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா வெற்றி பெறுவது அபூர்வமாக இருந்தது. இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற ஒருநாள் தொடரில் முன்னிலையில் இருந்தது. எனவே இப்போட்டியை வெற்றி ஒருநாள் தொடரையாவது இந்தியா வசம் மாற்ற விரும்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடி தொடக்கத்தை அளிக்க தடுமாறியது. முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் இனைந்து இங்கிலாந்தை 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தடுமாறச் செய்யவிட்டனர்.
ஷமி மின்னல் வேக பந்துவீச்சை மேற்கொண்டு பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வசம் வெற்றி வாய்ப்பை மாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து 205 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பேட்டிங் மூலம் சேஸ் செய்யப்பட்டு இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றி மூலம் இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான இந்த ஓடிஐ தொடரை வெல்ல அதிக நம்பிக்கையை அளித்தது.
#3 இந்தியா vs ஆப்கானிஸ்தான், சவுத்தாம்டன் 2019 (9.5-1-40-4)
பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்த காரணத்தால் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான இந்தியாவின் அடுத்த போட்டியில் இந்திய ஆடும் XIல் இடம்பிடித்தார். ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் விராட் கோலி மற்றும் கேதாரா ஜாதவ் அரைசதங்களை அடித்தனர்.
முகமது ஷமி பந்துவீச வந்து மிகவும் அதிரடி பேட்ஸ்மேன் ஷஷாயின் விக்கெட்டை ஆரம்பத்திலே வீழ்த்தினார். இடையிடையே இந்திய பௌலர்களின் விக்கெட்டுகள் மற்றும் மிடில் ஓவரில் பூம்ராவின் மின்னல் வேக பந்துவீச்சு மற்றும் கடைநிலை ஓவர்களில் முகமது ஷமியின் சிறப்பான வேகம் மூலம் போட்டி இந்தியா வசம் மாறியது.
கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஷமி வீசிய 3வது பந்தில் முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் அடுத்தடுத்த இரு பந்துகளிலும் மற்ற இரு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஷமி. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் முகமது ஷமியின் ஹாட்ரிக்கும் இப்போட்டியில் வந்தது.
#2 இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், மான்செஸ்டர் 2019 (6.2-0-16-4)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டியில் அந்த அணியின் சிறப்பான பௌலிங்கால் இந்திய அணி 268 என்ற ஒரு சுமாரான இலக்கை நிர்ணயித்தது. விராட் கோலியின் 72 மற்றும் தோனியின் 61 பந்துகளில் 56 ரன்கள் மூலம் ஒரு சிறப்பான ரன்களை இந்திய அணியால் குவிக்க முடிந்தது.
இப்போட்டியில் முகமது ஷமி அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டார். ஆரம்ப ஓவர்களில் கிறிஸ் கெய்லின் விக்கெட்டையும், அடுத்த சில பந்துகளில் ஷை ஹோப்பின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
மிடில் ஓவரில் நிலைத்து விளையாட முற்பட்ட ஷீம்ரன் ஹேட்மயரை தனது அதிரடி வேகப்பந்து வீச்சின் மூலம் வீழ்த்தினார். இறுதியாக ஓஸானே தாமஸின் விக்கெட்டை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளின் சேஸிங் கனவை கலைத்தார் முகமது ஷமி.
#1 இந்தியா vs பாகிஸ்தான், அடிலெய்டு 2015 (9-1-35-4)
இந்தியா 2015 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 300 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பாகிஸ்தானின் சில சிறப்பான பேட்டிங் வெளிப்பட்டது. சில அதிரடி பேட்ஸ்மேன்களை தன்வசம் வைத்திருந்தது பாகிஸ்தான்.
முகமது ஷமி தனது தொடக்க பௌலிங்கில் சரியான லென்த் மற்றும் லைனில் வீசினார். இவரது பவுண்ஸரின் மூலம் யோனிஷ் கானை வீழ்த்தி பாகிஸ்தானை தடுமாறச் செய்தார். அதன்பின் ஷஹீத் அஃப்ரிடி, மிஸ்பா-உல்-ஹக், வாஹாப் ரியாஜ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடர பெரும் துனையாக இருந்தார்.
இவ்வுலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தார் முகமது ஷமி.