உலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல உதவ இருக்கும் 5 முக்கிய வீரர்கள் 

Aaron Finch
Aaron Finch

கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பை என்பது முக்கியமான தொடர் ஆகும், உலக கோப்பை தொடங்க சில நாட்களே மீதமுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது அணியை வலுவாக்கி கொண்டு வருகின்றது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றன. 14 நாடுகள் பங்கேற்ற தொடரில் 49 போட்டிகளை கொண்டு நடைபெற்றது. இவற்றின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளே மோதின, ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வென்றது

2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கு பின்பு இருதரப்பு தொடர்களில் ஆஸ்திரேலியா அணி மோசமாகவே செயல்பட்டு வருகிறது, இருப்பினும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியா அணி மீண்டும் கோப்பை வெல்ல போதுமான பலம் பெற தொடங்கி இருக்கின்றது என கணித்துள்ளனர்.

இவற்றில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வெல்ல உதவியாக இருக்கும் 5 முக்கிய வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.

#1 ஆரோன் பின்ச்

உலகின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவரான பின்ச் அதிரடியாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க வீரரான இவர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்து அசத்தினார், தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் அந்த வருடத்தின் மூன்றாவது சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பதிவு செய்தார்.

இதன் பின்பு நடைபெற்ற போட்டிகளில் தனது பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தாலும் 2018ம் ஆண்டின் இவரது சராசரியானது 45 ஆகும்.

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளாசிய சதத்திற்கு பின்பு நடைபெற்ற போட்டிகளில் இவர் அரைசதத்தை கூட எட்ட தவறினார். சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டார், மூன்று போட்டிகளிலும் புவனேஸ்வர் குமாரின் ஓவரில் ஸ்டெம்பை நோக்கி வந்த பந்துகளை கையாள தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவர் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் இந்தியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த ஒருநாள் தொடரில் பார்ம்க்கு திரும்பி ஆஸ்திரேலியா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

#2 ஷான் மார்ஷ்

Shan marsh
Shan marsh

ஆஸ்திரேலியா அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராவார் ஷான் மார்ஷ். கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணியை மீட்டெடுப்பதில் இவர் வல்லவர். உலகக் கோப்பையில் எதிர்பார்ப்புகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை கொண்ட போட்டிகள் அதிகம் இருக்கும் என்பதால் இவரது பங்களிப்பு ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் முக்கியமாகும்.

2008ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடினார், அந்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றார், ஒருநாள் போட்டிகளில் சீராக ரன்கள் சேர்த்து வந்தாலும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் இதுவரை இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுவரை 63 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று இவர் 2300 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் சராசரி 43 ஆகும்.

சமீபத்தில், சிறப்பான பார்மில் உள்ள மார்ஷ் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி 60 ஆகும். அதுமட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் ஒரு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த பார்ம் உலக கோப்பையிலும் தொடரும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்ல இவர் முக்கிய வீரராகவே இருப்பார்.

#3 கிளென் மேக்ஸ்வெல்

Maxwell
Maxwell

ஆஸ்திரேலியா அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவராவார். ஆட்டத்தின் கடைசி பகுதிகளில் வேகமாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர். ஆஸ்திரேலியா அணிக்கு ஃபினிஷெராக செயல்பட்டு வருகிறார் மேக்ஸ்வெல்.

90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், இவரது சராசரி 33 ஆகும்.

2018 ஆம் ஆண்டில் மோசமாகவே செயல்பட்டுள்ளார், 7 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இவர் ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். இவரது சராசரி 30க்கும் குறைவாகும். இருப்பினும் இவரது அதிரடி ஆட்டம் அனைவரும் அறிந்ததே.

இவரது அதிரடி ஆட்டம் மட்டுமின்றி தேவைப்படும் நேரங்களில் பந்துவீச்சில் ஈடுபட்டு முக்கியமான விக்கெட்டுகளையும் சாய்த்து வருகிறார், எனவே அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு தனது பங்களிப்பை அளித்து வருவதால் இவரது ஆட்டம் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகிக்கும்.

#4 மிட்செல் ஸ்டார்க்

Starc
Starc

உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் மிட்செல் ஸ்டார்க். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்யக்கூடியவர் இவர்.

ஆஸ்திரேலியாவின் சிறந்த வேகபந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டார்க் ஒருநாள் போட்டியில் 145 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், இவரது சராசரி 21 ஆகும்.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல பெரிதும் உதவியாக இருந்தார். 8 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சராசரி 10 ஆகும்.

2015ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த இவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பையிலும் பந்துவீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

#5 பேட் கம்மிங்ஸ்

Commigs
Commigs

பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகின்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட நாட்களாக விளையாடி வரும் இவர் 42 ஒருநாள் போட்டிகளிலேயே பங்கேற்று உள்ளார். இவற்றில் 65 விக்கெட்டுகளை சாய்த்து உள்ள இவரது சராசரி 29 ஆகும்.

ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார் கம்மின்ஸ். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முக்கிய பங்கு வகித்தார். இவரது இந்த பார்மை உலகக் கோப்பை தொடரில் தொடரும் பட்சத்தில் ஸ்டார்க்-கம்மின்ஸ் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம் என்பது உறுதி.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now