#3 கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியா அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவராவார். ஆட்டத்தின் கடைசி பகுதிகளில் வேகமாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர். ஆஸ்திரேலியா அணிக்கு ஃபினிஷெராக செயல்பட்டு வருகிறார் மேக்ஸ்வெல்.
90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், இவரது சராசரி 33 ஆகும்.
2018 ஆம் ஆண்டில் மோசமாகவே செயல்பட்டுள்ளார், 7 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இவர் ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். இவரது சராசரி 30க்கும் குறைவாகும். இருப்பினும் இவரது அதிரடி ஆட்டம் அனைவரும் அறிந்ததே.
இவரது அதிரடி ஆட்டம் மட்டுமின்றி தேவைப்படும் நேரங்களில் பந்துவீச்சில் ஈடுபட்டு முக்கியமான விக்கெட்டுகளையும் சாய்த்து வருகிறார், எனவே அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு தனது பங்களிப்பை அளித்து வருவதால் இவரது ஆட்டம் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகிக்கும்.
#4 மிட்செல் ஸ்டார்க்
உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் மிட்செல் ஸ்டார்க். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்யக்கூடியவர் இவர்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த வேகபந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டார்க் ஒருநாள் போட்டியில் 145 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், இவரது சராசரி 21 ஆகும்.
2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல பெரிதும் உதவியாக இருந்தார். 8 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சராசரி 10 ஆகும்.
2015ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த இவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பையிலும் பந்துவீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
#5 பேட் கம்மிங்ஸ்
பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகின்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட நாட்களாக விளையாடி வரும் இவர் 42 ஒருநாள் போட்டிகளிலேயே பங்கேற்று உள்ளார். இவற்றில் 65 விக்கெட்டுகளை சாய்த்து உள்ள இவரது சராசரி 29 ஆகும்.
ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார் கம்மின்ஸ். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முக்கிய பங்கு வகித்தார். இவரது இந்த பார்மை உலகக் கோப்பை தொடரில் தொடரும் பட்சத்தில் ஸ்டார்க்-கம்மின்ஸ் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம் என்பது உறுதி.