சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு தனி பேட்ஸ்மேன் 200 ரன்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த 200 ரன்களை அடித்து 5 பேட்ஸ்மேன்கள் உலக சாதனையை படைத்துள்ளனர். அந்த ஐந்து பேட்ஸ்மேன்களில் யார் மிக விரைவில் இரட்டை சதம் அடித்தனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.
#5) மார்டின் குப்டில்
இவர் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவர். சில வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்றது. அந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான மார்டின் கப்தில் 153 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அந்த இரட்டைச் சதத்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#4) சச்சின் டெண்டுல்கர்
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். முதன் முதலில் இரட்டை சதத்தை அடித்த சச்சின் டெண்டுல்கர் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
#3) ஷேவாக்
இந்த பட்டியலில் நமது இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் உள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சேவாக் தனது முதல் இரட்டை சதத்தை 140 பந்துகளில் பதிவு செய்தார். இந்த இரட்டைச் சதத்தில் 7 சிக்சர்களும், 21 பவுண்டரிகளும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ரோஹித் சர்மா
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா உள்ளார்.
இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 139 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 16 சிக்சர்கள் அடித்து ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறை இரட்டை சதம் விளாசி அவர் என்ற சாதனையையும் வைத்துள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக பட்சமாக இவர் 264 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1) கிறிஸ் கெயில்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் உள்ளார். உலகின் மிக ஆபத்தான வீரர்களில் ஒருவரான கிறிஸ் கெயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை 138 பந்துகளில் பதிவு செய்தார். அந்த போட்டியில் இவர் 16 சிக்ஸர்களும் மற்றும் 21 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.