கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் சிக்ஸர்கள் அடிப்பது தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தற்போழுது நடைபெறும் டி-20 போட்டிகளில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை. கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் அதிகம் சிக்ஸர்கள் அடிக்கவே ஆர்வம் காட்டுவார்கள். தற்போழுது நடைபெற்று வரும் டி-20 லீக் போட்டி தொடர்களில் எல்லாம் சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் முதல் கொண்டு அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பார்போம்.
#1 கிரிஸ் கெய்ல்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிரிஸ் கெய்ல். இவர் டி-20 போட்டிகளில் அதிரடி மன்னர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு யுனிவர்சல் பாஸ் (Universal Boss) என்றும் பெயர் உண்டு. இவர் டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடி சிக்ஸர்களை வீளாச கூடியவர். இவர் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் 98 சிக்ஸர்கள் வீளாசி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 284 போட்டிகள் விளையாடி 275 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதே போன்று டி-20 போட்டிகளில் 56 போட்டிகள் விளையாடி 103 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். இவர் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கும் திறமை கொண்டவர். இவர் இதுவரை 443 சர்வதேச போட்டிகள் விளையாடி 513 இன்னிங்ஸில் 476 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
#1 ஷாகித் அப்ரிடி
இந்த பட்டியலில் கெய்லுடன் முதல் இடத்தை பகிர்வது பாகிஸ்தான் அதிரடி மன்னன் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாகவே ஆடக்கூடியவர். பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரராக திகழந்தவர். இவர் டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாட கூடியவர். இவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்ஸர்களை அடித்துள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளை விளையாடி உள்ள அப்ரிடி 351 சிக்ஸர்களை அடித்து, ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். அதே போன்று டி-20 போட்டியில் 99 போட்டிகள் விளையாடி 73 சிக்ஸர்களை அடித்துள்ளார். இவர் இதுவரை 524 சர்வதேச போட்டிகள் விளையாடி 508 இன்னிங்ஸில் 476 சிக்ஸர்களை வீளாசியுள்ளார்.
#2 பிரன்டன் மெக்கலம்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் அதிரடி வீரர் பிரன்டன் மெக்கல்லம். இவர் டெஸ்ட் போட்டியிலேயே சிக்ஸர் மழை பொழிய கூடியவர். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிக்ஸர்களை குவிக்கும் திறமை உடையவர். இவர் டி-20 போட்டிகளில் வெற்றி நாயகனாக திகழ்ந்தவர். இவர் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 107 சிக்ஸர்களை அடித்துள்ளார். இது போன்று ஒரு நாள் போட்டியில் 260 போட்டிகள் விளையாடி 200 சிக்ஸர்களை குவித்துள்ளார். டி -20 போட்டிகளில் 71 போட்டிகள் விளையாடி 91 சிக்ஸர்களை வீளாசி உள்ளார். இவர் இதுவரை 432 போட்டிகளில் 474 இன்னிங்ஸ் விளையாடி 398 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
#3 ஜெயசூரியா
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா. இவர் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்காக சிறப்பான தொடக்கத்தை அமைத்து தரக்கூடிய வீரர் பல சாதனைகளை படைத்துள்ள ஜெயசூரியா. இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 59 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 445 போட்டிகள் விளையாடி 270 சிக்ஸர்களை குவித்துள்ளார். டி-20 போட்டிகளில் 31 போட்டிகள் மட்டுமே விளையாடி 23 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவர் இதுவரை 586 போட்டிகளில் 651 இன்னிங்ஸில் 352 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
#4 ரோஷித் சர்மா
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஷித் சர்மா. இந்த பட்டியலில் இருபவர்களிலேயே மிகவும் குறைந்த போட்டிகள் விளையாடி அதிக சிக்ஸர்கள் அடித்தவர் ரோஷித் சர்மா தான். இளம் வயதிலேயே அதிக சிக்ஸர்களை குவித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக சிக்ஸர்களை வீளாச கூடியவர். இவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 32 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 201 போட்டிகள் விளையாடி 215 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே போன்று டி-20 போட்டிகளில் 93 போட்டிகள் விளையாடி 102 சிக்ஸர்களை வீளாசியுள்ளார். இவர் இதுவரை 321 போட்டிகளில் 327 இன்னிங்ஸ் விளையாடி 349 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
#5 மகேந்திர சிங் தோனி
இநத் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்த பட்டியலில் இருப்பவர்களிலேயே ஐந்தாவதாக களம் இறங்கி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து கொடுப்பதில் வல்லவர். இவர் இதுவரை 90 போட்டிகள் விளையாடி 78 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 338 போட்டிகளில் 222 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டி-20 போட்டிகளில் 96 போட்டிகள் விளையாடி 48 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி இதுவரை 523 போட்டிகளில் 512 இன்னிங்ஸ் விளையாடி 348 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.