#4. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கிற்கும் இது கடைசி உலகக் கோப்பை தொடர் ஆகவே பார்க்கப்படுகிறது. 37 வயதான மாலிக் பாகிஸ்தானுக்காக 431 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தானை பல்வேறு போட்டிகளில் தோல்விகளிலிருந்து வெற்றி பாதைக்கு மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சில காலம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு சர்வதச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் 2000 ஆம் ஆண்டிற்க்கு முன் அறிமுகமான ஓரே வீரர் என்ற பெருமைக்குறியவர்.
#5. லசித் மலிங்கா (இலங்கை)
இந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவும் உள்ளார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய அவருக்கு தற்போது வயது 35. கடந்த ஆண்டில் ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள மலிங்கா 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக கூறி இருக்கிறார். ஆனால் 50 ஓவர் போட்டிகளில் உலகக் கோப்பையுடன் ஒய்வு பெறுவார் எனக் கூறியுள்ளார்.
#6. ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)
35 வயதான ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார், இதுவரை ஒய்வு பற்றி தெரிவிக்கவில்லை இருப்பினும் இவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் 7000க்கும் மேற்பட்ட ரன்களை நியூசிலாந்து அணிக்காக குவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமைக்குறியவர்.