எந்த ஒரு அணிக்கும் தொடக்க ஜோடியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பேட்டிங் வரிசையில் முக்கியம் வாய்ந்த இந்த இரு பேட்ஸ்மேன்களின் உதவியால் 50 சதவீத வேலைப்பளு அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு குறைக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடி தருணங்களின் இயல்பை உணர்ந்து எவ்வித சூழ்நிலையிலும் பொறுமையாக கையாண்டு விளையாடினால், எளிதில் அணியின் வெற்றியை உறுதி செய்துவிட முடியும். ஒருவேளை, இதற்கு எதிர்மாறாக தொடக்க ஜோடியின் விக்கெட்கள் ஆட்டத்தின் விரைவிலேயே சரிந்துவிட்டால் அணியை மீண்டும் கட்டமைப்பது கடினமான காரியமாகும். ஏனெனில், அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி விரைவிலேயே தங்களது விக்கெட்களை இழக்க நேரிடும். எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த தொடக்க ஜோடிகளை பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
#3. ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டுக்கு பின்னர், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை மேலும் வலுசேர்க்கும் விதமாக விளையாடி வருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாக அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 2019 உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி தற்போது பின்ச் மற்றும் வார்னரை தொடக்க ஜோடியாக களமிறக்கி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்காக தலா 100 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக விளையாடி உள்ளனர். அவற்றில் குறிப்பிடும் வகையில், தங்களது பேட்டிங் சராசரி 40க்கும் மேல் வைத்துள்ளனர். இதுவரை இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஆறு சதங்கள் உள்பட 2,5 24 ரன்கள் குவிக்கப்பட்டு உள்ளன. 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து 237 ரன்களை குவித்ததே இதுநாள் வரை இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அமைந்த சிறந்த ஆட்டமாக உள்ளது.
#2.ஜாசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ - இங்கிலாந்து:
2019 உலக கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது, இங்கிலாந்து அணி. இந்த அணியின் சரிசம வீரர்களின் பங்களிப்பு தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாய் வருகின்றது. அதுபோல, அணியின் தொடக்க ஜோடியான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் இணை உலகின் அபாயகரமான ஜோடியாக திகழ்ந்து வருகின்றது. உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்த இந்த ஜோடி தவறுவதில்லை. 62.62 என்ற பார்ட்னர்ஷிப் சராசரியை கொண்டுள்ள இந்த இணை அனைத்து தொடக்க ஜோடிகளை காட்டிலும் சிறந்ததொரு சராசரியை கொண்டுள்ளது. இதுவரை 29 இன்னிங்சில் களமிறங்கிய இவர்கள் தங்களது பார்ட்னர்ஷிப்பில் 1816 ரன்களை குவித்துள்ளனர். அவற்றில் 8 சதங்களும் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 174 விரல்களை தங்களது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கியது சிறந்த ஆட்டமாக இதுவரை உள்ளது.தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்கள் குவிக்கப்பட்டன.
#1.ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் - இந்தியா:
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சற்று குழப்பங்கள் நிலவி வந்தாலும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணையின் பேட்டிங் பங்களிப்பை இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது. இவர்களுக்கு பக்கபலமாக அணியின் கேப்டன் விராட் கோலி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ரோகித் மற்றும் தவான் கூட்டணி கடந்த ஆறு ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக உருபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்ட தவான், 2019 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய தொடக்க ஜோடிகளை காட்டிலும் இவர்கள் அதிகபட்ச ரன்களை குவித்துள்ளனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இதுவரை 481 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றில், இவர்களது கூட்டணியின் பேட்டிங் சராசரி 45.59 என்ற வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இணைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை உருவாக்கிய பார்ட்னர்ஷிப் என்ற பெருமையையும் கொன்றுள்ளனர் இந்த ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி.