#1.ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் - இந்தியா:

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சற்று குழப்பங்கள் நிலவி வந்தாலும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணையின் பேட்டிங் பங்களிப்பை இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது. இவர்களுக்கு பக்கபலமாக அணியின் கேப்டன் விராட் கோலி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ரோகித் மற்றும் தவான் கூட்டணி கடந்த ஆறு ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக உருபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்ட தவான், 2019 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய தொடக்க ஜோடிகளை காட்டிலும் இவர்கள் அதிகபட்ச ரன்களை குவித்துள்ளனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இதுவரை 481 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றில், இவர்களது கூட்டணியின் பேட்டிங் சராசரி 45.59 என்ற வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இணைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை உருவாக்கிய பார்ட்னர்ஷிப் என்ற பெருமையையும் கொன்றுள்ளனர் இந்த ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி.