ஒரு நாள் போட்டியின் டாப் 5 ஒபனிங் பேர்கள்

Ajay V
Sachin and Sehwag
Sachin and Sehwag

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை ஒபனிங் பேட்ஸ்மேன்கள் அணியின் வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். நல்ல தொடக்கம் நிச்சயமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சுமையை பெருமளவு குறைக்கும். ஒபனிங் பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஆடுகளங்களில் பொறுமையோடு விளையாடும் திறமையும், சாதகமான ஆடுகளங்களில் பவர்பிளேயை பயன்படுத்திக் கொண்டு விரைவாக ரன் குவிக்கும் திறமையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் பவுலிங் செய்யும் பொழுது அவர்களுடைய சிறந்த பவுலருடன் தான் துவங்குவர் , ஆதலால் அந்த சவாலை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் நல்ல பேட்டிங் டெக்னிக் உடையவர்களாக இருக்க வேண்டும். ஒபனிங் பொறுத்த வரை ரன்களை மட்டும்‌ அளவுக் கோளாக வைத்து கொண்டு மதிப்பிடுவது கடினம். ஜெயசூரியா - கலூவிதரனா மற்றும் சோகைல் - அன்வர் நன்றாக விளையாடி இருந்தாலும், குறுகிய காலமே ரன்களைத் தொடர்ந்து குவித்தனர். ஆதலால் இந்த லிஸ்டில் அவர்கள் இடம் பெறவில்லை.

#5 சேவாக் – டெண்டுல்கர் ( Sehwag – Tendulkar )

இந்த இரு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் 2011 உலக கோப்பையில் அனைத்து பவுலர்களையும் துவம்சம் செய்தனர். தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற நல்ல பவுலிங் கொண்ட அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இவர்களில், சேவாக் எல்லா சமயங்களிலும் ஆக்ரோஷமாகவே ஆடுவார், சச்சின் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து தன் ஆட்டத்தை மாற்றுவதில் வல்லவர்.

இவர்கள், 93 இன்னிங்சில் 3919 ரன்கள் குவித்தனர். மொத்தம் 12 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் குவித்தனர். சராசரி கொஞ்சம் குறைவாக இருக்க காரணம் , சேவாக் சில சமயம் அவசரப்பட்டு விக்கெட்டை பறிக்கொடுத்து விடுவார். ஆனால், அவர் க்ரீசில் இருக்கும் போது பொழுதுப்போக்கிற்கு பஞ்சம் இருக்காது.

#4 கில்கிறிஸ்ட் - மார்க் வாக் ( Gilchrist – Mark Waugh )

Gilchrist and Mark Waugh
Gilchrist and Mark Waugh

1998 - 2002 வரை வழக்கத்தை விட அதிகமான போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடியது. இந்த தருணத்தில் தான் ஆஸ்திரேலியா மெதுவாக சர்வதேச அரங்கில் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவின் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கில்கிறிஸ்ட். அவரும் மார்க் வாகும் இணைந்து பல சிறந்த பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டனர். கிரிக்கெட் வரலாற்றில் " விக்கெட் கீப்பர் " பேட்ஸ்மேன் ரோலை மாற்றி எழுதிய பெருமை கில்கிறிஸ்டையே சாரும். இன்னொரு புறம் மார்க் வாக் எனும் பேட்டிங் கலைஞன் , தனது ஸ்டைலான பேட்டிங்கால் உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். இவர்கள், 93 இன்னிங்சில் 3853 ரன்கள் குவித்தனர். மொத்தம் 8 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 40 ரன்கள் குவித்தனர்.

#3 கில்கிறிஸ்ட் – ஹைடன் ( Gilchrist – Hayden )

Gilchrist and Hayden
Gilchrist and Hayden

ஆஸ்திரேலியாவின் " இன்வின்சிபிள்ஸ்"( Invincibles) அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடனின் அதிரடி ஆட்டம் தான். இருவரும் இடது கை ஆட்டகாரர்கள் மற்றும் எந்த பவுலரையும் வெளுத்து வாங்கும் திறமை உடையவர்கள். இவர்கள், 114 இன்னிங்சில் 5372 ரன்கள் குவித்தனர். மொத்தம் 16 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 48 ரன்கள் குவித்தனர். இவர்கள் உலக கோப்பை வரலாற்றின் சிறந்த ஓபனர்கள் என கூறினால் மிகையாகாது. ஆஸ்திரேலியாவின் 87 வெற்றிகளில் இருவரும் ஓபனர்களாக பங்கு கொண்டனர்.

#2 கார்டன் க்ரீனிட்ஜ் - டெஸ்மன்ட் ஹெய்னஸ் ( Greenidge – Haynes )

Greenidge and Haynes
Greenidge and Haynes

1979 - 1991 வரை இந்த இரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களும் உலகின் பல சிறந்த பவுலிங் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்‌. இவர்கள், 102 இன்னிங்சில் 5150 ரன்கள் குவித்தனர். மொத்தம் 15 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 52.55 ரன்கள் குவித்தனர்.

இவர்களின் 15 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களில் ,13 சொந்த ஊருக்கு வெளியே கடினமான ஆடுகளில் குவித்த ரன்கள். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறிப்பாக இந்திய மற்றும் பாகிஸ்தான் பவுலர்களை மிகவும் அச்சுறுத்தினார். ஆனால், டெனிஸ் லில்லீக்கு எதிராக இருவரும் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#1 டெண்டுல்கர் – கங்குலி ( Tendulkar – Ganguly )

Sachin and Ganguly
Sachin and Ganguly

இவர்கள் இருவரும் ஒபனிங் ஆடி புரிந்த சாதனைகளுக்கு அளவே இல்லை. 11 வருடங்களில் மொத்தம் 136 இன்னிங்சில் 6609 ரன்கள் குவித்தனர். மொத்தம் 21 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 49.32 ரன்கள் குவித்தனர். சொந்த ஊருக்கு வெளியே இவர்கள் குவித்த 4697 ரன்களை விட அதிகமாக கிரிக்கெட்டின் எந்த ஒரு பேட்டிங் இணையும் ரன்கள் குவித்ததில்லை. அது மட்டுமல்லாது அணியின் வெற்றிகளில் அதிக ரன்கள் குவித்த ஓபனிங் இணை என்ற பெருமை இவர்களையே சாரும். கிரிக்கெட்டின் பல தலைசிறந்த பவுலர்களையும் இவர்கள் எளிதாக சமாளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து - க்ரிஷ் ஷ்ரீபதா

மொழியாக்கம் - அஜய்

.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications