#2 கார்டன் க்ரீனிட்ஜ் - டெஸ்மன்ட் ஹெய்னஸ் ( Greenidge – Haynes )
1979 - 1991 வரை இந்த இரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களும் உலகின் பல சிறந்த பவுலிங் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள், 102 இன்னிங்சில் 5150 ரன்கள் குவித்தனர். மொத்தம் 15 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 52.55 ரன்கள் குவித்தனர்.
இவர்களின் 15 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களில் ,13 சொந்த ஊருக்கு வெளியே கடினமான ஆடுகளில் குவித்த ரன்கள். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறிப்பாக இந்திய மற்றும் பாகிஸ்தான் பவுலர்களை மிகவும் அச்சுறுத்தினார். ஆனால், டெனிஸ் லில்லீக்கு எதிராக இருவரும் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
#1 டெண்டுல்கர் – கங்குலி ( Tendulkar – Ganguly )
இவர்கள் இருவரும் ஒபனிங் ஆடி புரிந்த சாதனைகளுக்கு அளவே இல்லை. 11 வருடங்களில் மொத்தம் 136 இன்னிங்சில் 6609 ரன்கள் குவித்தனர். மொத்தம் 21 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 49.32 ரன்கள் குவித்தனர். சொந்த ஊருக்கு வெளியே இவர்கள் குவித்த 4697 ரன்களை விட அதிகமாக கிரிக்கெட்டின் எந்த ஒரு பேட்டிங் இணையும் ரன்கள் குவித்ததில்லை. அது மட்டுமல்லாது அணியின் வெற்றிகளில் அதிக ரன்கள் குவித்த ஓபனிங் இணை என்ற பெருமை இவர்களையே சாரும். கிரிக்கெட்டின் பல தலைசிறந்த பவுலர்களையும் இவர்கள் எளிதாக சமாளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து - க்ரிஷ் ஷ்ரீபதா
மொழியாக்கம் - அஜய்
.