ஆசியாவிற்கு வெளியே இந்திய அணி ஒரு டெஸ்ட் வெற்றி கூட பெறாத புகழ் பெற்ற 3 மைதானங்கள்.

Team India.
Team India.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு பொதுவான ஒரு கனவு உள்ளது. அது ஆசியக் கண்டத்திற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரை (அல்லது) ஒரு டெஸ்ட் போட்டியையாவது வெல்ல வேண்டும் என்பதாகும். ஆசியக் கண்டத்திற்கு வெளியே உள்ள மைதானங்கள் முற்றிலும் மாறுபட்டவை. இந்திய துணைக்கண்ட மைதானங்கள் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சுக்கு உகந்தவையாக இருக்கும். ஆனால் ஆசியாவிற்கு வெளியே உள்ள மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைக்க கூடியது.

இதனாலேயே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்வது ஆசிய அணிகளுக்கு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 18 மாதங்களில் இந்திய அணி மூன்று பெரிய டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடியது. இதில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடரை இந்திய அணி இழந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது.

தற்போதைய நிலையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்று வந்தாலும் இந்திய அணியால் இன்னும் ஒரு டெஸ்ட் வெற்றி கூட பெற முடியாத சில மைதானங்கள் உள்ளன அதில் மிக புகழ் பெற்ற 3 மைதானங்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

#1 நியூலேண்ட்ஸ், கேப்டவுன்.

India in South Africa.
India in South Africa.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற மைதானமான இதில், 1992-93 ஆம் ஆண்டில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இது நான்காவது மற்றும் கடைசி போட்டி இந்த 'நியூலேண்ட்ஸ்' மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் உப்பு சப்பில்லாமல் நடந்த இந்த போட்டியில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

1996-97 மற்றும் 2006-07 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை மற்றுமல்லாது இந்த டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி இழந்தது.

2010-11 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் அபாரமான இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆனால் சச்சின் தெண்டுல்கர் மற்றும் கௌதம் காம்பீர் ஆகியோரின் அபார ஆட்டத்தில் இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்தது.

இந்திய அணி விராட் கோலி தலைமையில் பங்கேற்று சமீபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக வெற்றி வாய்ப்புக்கு மிக அருகில் வந்தது. ஆனால் இந்திய அணி தேர்வில் ரஹானேவுக்கு பதிலாக இந்த போட்டியில் இடம்பெற்ற ரோகித் சர்மா மோசமாக சொதப்பினார். மேலும் தென் ஆப்ர்க்காவின் 'டிவில்லியர்ஸ்' தனது அபார ஆட்டத்தால் வெற்றியை இந்திய அணியிடம் இருந்து பறிக்கவே, இந்த போட்டியில் இந்திய அணி மிக அருகில் வந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

போட்டிகள் - 5, தோல்வி - 3, டிரா - 2.

#2 காபா, பிரிஸ்பேன்.

India in Australia.
India in Australia.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற இந்த மைதானம் 'தி காபா' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இப்பொழுது வரையிலும் இந்த மைதானம் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அதில் 39 போட்டிகளை வென்று உள்ளது. 13 போட்டிகள் டிராவில் முடிந்தது. 1 போட்டி 'டை' ஆக, வெறும் 8 போட்டிகளில் மட்டுமே இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்து உள்ளது ஆஸி அணி.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது கடந்த 1988-ஆம் ஆண்டு வலுவான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆகும். அதன் பின்னர் இந்த மைதானத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இந்த மைதானத்தில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அதில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியை மட்டுமே டிரா செய்தது. எஞ்சிய 5 முறையும் இந்திய அணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

போட்டிகள் - 6, தோல்வி - 5, டிரா - 1.

#3 எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்.

India in England.
India in England.

சமீபத்தில் நடந்த 'ஆஷஸ்' தொடரின் முதல் போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தாலும் இந்த மைதானம் இங்கிலாந்து அணியின் கோட்டையாக தான் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆசிய அணிகள் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்) மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் இங்கிலாந்தின் ஆட்டம் அபாரமானது.

1986-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தாலும், இந்த மைதானத்தில் ஆடிய மற்ற 6 ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு தோல்வியே எஞ்சியது. அதிலும் குறிப்பாக 1974, 1979 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் முறையே 78, 83 & 241 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விகளை சந்தித்தது. இதில் கடந்த ஆண்டு மட்டுமே இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் - 7, தோல்வி - 6, டிரா - 1.

Quick Links

App download animated image Get the free App now