#2 90 ரன்கள் - அடிலெய்டு
சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போன்ற அனைத்திலும் 2016-ஆம் ஆண்டை தன்வசப்படுத்திருந்தார் விராட் கோலி. இதுவரை, டி20 போட்டிகளில் 2016ஆம் ஆண்டே விராட் கோலிக்கு சிறந்த ஆண்டாகும். இவை அனைத்தும் அடிலெய்டில் ஆரம்பித்தது.
2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இந்த மூன்று போட்டிகளில் விராட் கோலி 199 ரன்களை குவித்தார்.
இத்தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் 40 ரன்களை சேர்த்தனர். களமிறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டார். இறுதியாக 85 பந்துகளில் 90 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 188 ரன்கள் சேர்த்தது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 90 ரன்களை குவித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
#361* ரன்கள் - சிட்னி
2018ஆம் ஆண்டு சிறந்து விளங்கிய விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருந்தார். 2018-ல் டி20 போட்டிகளில் பெரிதும் பங்கேற்கவில்லை. பங்கேற்ற சில போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இவற்றில் முதல் போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது, இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் மூன்றாவது மற்றும் இறுதி போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அதிரடியாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் அவர்களில் 67 ரன்களை குவித்தனர். இருப்பினும், அதன்பின்பு தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். நம்பர் 3ல் களமிறங்கிய கோலி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. ஆண்ட்ரூ டை, மேக்ஸ்வெல் போன்ற பந்துவீச்சாளர்களின் ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம் தனது அரைசதத்தை 18-வது ஓவரில் எட்டினார். இந்தியா அணி கடைசி ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இத்தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் விராட் கோலி 41 பந்துகளில் 61 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.