3. டேவிட் வார்னர்
“பாக்கெட் டைனமைட்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் வார்னர். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக இவரது IPL வாழ்க்கையை தொடங்கினார். சேவாக்கை போன்று அதிரடி காட்டக்கூடிய வார்னர், அந்த அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம் பிடித்தார். டெல்லி அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராகள் பட்டியலில் இன்றும் இரண்டாம் இடம் வகிக்கிறார். அதன் பிறகு சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் இவரை நல்ல தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற வார்னர், 2016ம் ஆண்டு நடந்த IPL தொடரில் ஹைதெராபாத் அணி கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
பால் டாம்பெரிங் (Ball Tampering) என்ற குற்றம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டின் IPL தொடரில் இருந்து விலகிக்கொண்டார். கேப்டன் பொறுப்பை வில்லியம்சன் ஏற்றுக்கொண்டார். இதுவரை 114 போட்டிகளில் 4014 ரன்கள் குவித்துள்ள வார்னர், சராசரியாக 40.55 ரன்களை வைத்துள்ளார். இதில் 36 அரை சதங்களும் 3 சதமும் அடங்கும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரைட் 142.14 ஆக உள்ளது. இது டெல்லி அணிக்கு விளையாடியதை விட 24 புள்ளிகள் அதிகம்.
4. கிறிஸ் கெய்ல்
உலகின் மிகச்சிறந்த T20 பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிறிஸ் கெய்ல், கடந்த நான்கு ஐந்து வருடங்களாக IPL தொடரில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். 2008 முதல் 2010 வரை கொல்கத்தா அணிக்கு விளையாடிய இவர், 3 சீசனிலும் சரியாக விளையாடாத காரணத்தால் 2011 ஆண்டிற்கான ஏலத்தில் விலை போகாமல் இருந்தார். பின்பு காயம் காரணமாக டிர்க் நன்னெஸ் தொடரிலிருந்து வெளியேறியதால் அவருக்கு மாற்று வீரராக பெங்களூர் அணி கிறிஸ் கெய்லை வாங்கியது. அதன் பின் நடந்த அனைத்தும் சரித்திரத்தில் தான் இடம் பெற்றது. தொடர்ந்து இரண்டு வருடம் ஆரஞ்சு கேப் விருதை தட்டிச்சென்ற கெய்ல் முறியடிக்காத சாதனைகளே இல்லை என கூறலாம். 2017 வரை பெங்களூர் அணிக்காக விளையாடிய இவரை 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி வாங்கியது.
இதுவரை 111 போட்டிகளில் பங்கேற்றுள்ள கெய்ல் 3994 ரன்கள் சேர்த்துள்ளார். இதிலே 24 அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும். இவரது சராசரியாக 41.18 ரன்கள் வைத்துள்ளார். இதுவரை IPL தொடரில் மொத்தம் 290 சிக்ஸர்கள் உடன் சிக்ஸர்கள் அதிகம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இந்த சாதனையானது இரண்டாம் இடம் பிடித்த தோனியை விட 104 சிக்ஸர்கள் அதிகம்.
5. கேன் வில்லியம்சன்
நியூஸிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சன், 2017 ஆம் ஆண்டு வரை சரியாக அணியில் இடம் கிடைக்காமல் தன் வாய்ப்புக்காக காத்திருந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இவருக்கு திருப்புமுனையாக அமைத்தது. வார்னருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற வில்லியம்சன், ஹைதெராபாத் அணியை இறுதி போட்டிவரை அழைத்துச் சென்றார். மேலும் இவ்வருடத்தின் ஆரஞ்சு கேப் விருதையும் தன்வசமாக்கினார். விளையாடிய அனைத்து போட்டியிலும் தனக்கான பாணியில் விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுவரை 32 போட்டிகளில் 1146 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சன், சராசரியாக 42.44 ரன்கள் வைத்துள்ளார். இதில் 11 அரை சதங்கள் அடங்கும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரைட் 137.11 ஆக உள்ளது. இவரது அதிகபட்ச ஸ்கோராக 89 ரன்கள் அடித்துள்ளார்.