வெற்றியைத் தேடி தரக்கூடிய சிறந்த முன்வரிசை பேட்ஸ்மேன்களால் ஆசீர்வதிக்கப்பட்டது இந்திய அணி சுனில் கவாஸ்கர் முதல் விரேந்திர ஷேவாக் வரை அனைத்து துவக்க ஆட்டக்காரர்களும் ஆட்டம் துவங்கிய முதலே நின்று இந்திய அணிக்காக வெற்றிபெற்று தந்துள்ளனர்.இது அந்தத் துவக்க ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமல்லாது அவர்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை எப்படி உருவாக்கினர் என்பதை பற்றிய பதிவாகும்.நல்ல ஒரு அடித்தளத்தை அணிக்காக ஆரம்பித்து நடுவரிசை ஆட்டக்காரர்கள் அதனைப் பொருட்படுத்தி அணியின் வெற்றிக்காக அவர்களை ஆடுமாறு செய்வதே இவர்களது முக்கிய கடமையாகும்.ஒரு கம்பீரமான துவக்க ஜோடியை ஒரு அணி பெறுவது பெரும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகும்.இவர்கள் தொடக்க ஜோடி என்ற போதிலும் ஒரு சிறந்த வீரர்களாக பலமுறை இந்திய அணியைத் தங்களது கடின உழைப்பினால் வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே மூன்று வேறு நபர்களுடன் கைகோர்த்து துவக்க ஜோடியில் ஒருவராக இந்திய ஒருநாள் போட்டிகளில் வலம்வந்தார்.
மேலும் இவர்கள் இந்திய அணி இரு முறை 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லவும் உதவிகரமாக இருந்துள்ளனர். உலகின் வேறு எந்த அணிக்குமே இந்திய அணியைப் போன்ற சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் எளிதில் கிடைத்திடவில்லை.அந்தவகையில், இந்தியா கிரிக்கெட் அணியானது அதிர்ஷ்டமுள்ள அணியாக உள்ளது.ஏனென்றால், இந்திய அணி பல வெற்றிகரமான துவக்க ஜோடிகளைக்கொண்டு இரண்டு முறை உலகக்கோப்பை பட்டத்தை வென்றுள்ளது.அவ்வகையில், தற்போதுள்ள இந்திய துவக்க ஜோடியான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா கூட்டணியும் அதே தொன்றுதொட்டு வரும் ஜோடியாகவே இந்தியாவிற்கு உள்ளது. சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த, கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக், ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா, சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை உட்பட அனைத்து கால சிறந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட ஜோடிகளைப் பற்றி இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகளை இனி காணலாம்.
5.சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணை:
காலம் : 1981 - 1987
இந்த இணை தான் இந்திய அணிக்குக் குறுகிய கால கிரிக்கெட்டில் முதன்முறையாக கிடைத்த வெற்றிகரமான கூட்டணியாகும்.ஆட்டத்தை துவக்குவதில் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணையானது 1981 முதல் 1987 வரை துவக்க ஜோடியாக சுமார் ஆறு ஆண்டுகள் இந்திய அணிக்கு நீடித்தனர்.1983-இல் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது உட்பட, குறுகிய கால கிரிக்கெட்டில் அணியை வெற்றி பெறச்செய்யவதில் இந்த இணை நீண்ட காலமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
கவாஸ்கர் - ஶ்ரீகாந்த் இணையானது 1680 ரன்களும் 30.54 என்ற ஆவரேஜை வெறும் 55 இன்னிங்சில் எடுத்தது.இந்த இணை தங்களது பார்ட்னர்ஷிப்பில் இரு சதங்கள் மற்றும் 11 அரைசதங்களை அடித்துள்ளனர்.136 ரன்கள் குவித்ததே இவர்களது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.
2.கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக் இணை:
காலம் : 2003 - 2013
சச்சின் டெண்டுல்கர் துவக்க ஆட்டக்காரராக இல்லாமல் ஆட்டத்தைத் துவக்கிய வாய்ப்பு இந்த இணைக்கே முதல்முறையாக கிடைத்தது.மேலும் இவர்கள் ஆடிய முதல் மற்றும் கடைசி போட்டிவரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.அணிக்கு நீண்டகாலமாக பல்வேறு மறக்கமுடியாத தருணங்களையும் வெற்றிகளையும் குவித்ததால், இவர்களே மிகவும் வெற்றிகரமான துவக்க ஜோடியாக கருதப்படுகிறது.
இவர்கள் இந்திய அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 1870 ரன்களையும் 50.54 என்ற சிறந்த ஆவரேஜையும் வைத்துள்ளனர்.துவக்க இணையாக இவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் குவித்தே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.மேலும், இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும் 7 அரைசதங்களும் அடித்துள்ளனர்.
3.சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் இணை:
காலம் : 2002 -2012
இந்த ஜோடியானது ஒரு குரு மற்றும் சிஷ்யனை உள்ளடக்கிய ஜோடியாகவே அறியப்பட்டது.சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் இணையே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அச்சுறுத்தக்கூடிய இணையாக கருதப்படுகிறது.ஆட்டத்தின் ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கும் ஷேவாக், பொறுமையாக கிளாசிக் ஷாட்களை நொறுக்கும் சச்சினின் அனுபவம் ஆகிய இரண்டும் ரசிகர்களுக்கு விருந்தளித்தது.2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர்களது பங்கு ஏராளம்.
இந்திய அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 12 சதங்களும் 18 அரைசதங்களும் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பெற்றவை.மேலும் இந்திய ஒருநாள் போட்டிகளில் 93 இன்னிங்சில் 3919 ரன்களை 42.13 என்ற ஆவரேஜூடன் இவர்களது சாதனை அடங்கும்.மேலும் இவர்கள் குவித்த 182 ரன்களே இவர்களது அதிகப்படியான பார்ட்னர்ஷிப்பாகும்.
2.ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா இணை:
காலம் : 2013 - இன்றுவரை
இந்த இணைதான் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 பேட்டிகளின் தற்போதைய துவக்க ஜோடியாகும்.இந்திய ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஷேவாக் இணைக்கு அடுத்தப்படியாக வெற்றிகரமான இணையாகவே கருதப்படுகிறது.அதிக சதங்கள் அடித்த ஐந்து சிறந்த ஜோடிகளில்தலைசிறந்த இரண்டாவது ஜோடியாக ரோகித் - தவான் இணை உள்ளது.
2013 -இல் இந்த ஜோடி முதன்முறையாக இந்திய அணியின் துவக்கு ஜோடியாக களம் இறக்கப்பட்டனர்.இவர்கள் 88 போட்டிகளில் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டு 45.88 என்ற ஆவரேஜூடன் 3992 ரன்களையும் சேர்த்துள்ளனர்.பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த 210 ரன்கள் இவர்களது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.இவர்களது கூட்டணியில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 13 சதங்களும் 13 அரைசதங்களும் அடித்துள்ளனர்.
1.சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை:
காலம் : 1996 - 2007
இந்திய அணிக்கு கிடைத்த ஆகச்சிறந்த அனைத்துகால தொடக்க ஜோடியாக சச்சின் மற்றும் கங்குலி இணை கருதப்பட்டது.இந்த ஜோடியானது இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடி மட்டுமல்லாது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் உலகின் தலைசிறந்த வெற்றிகரமான தொடக்க ஜோடியாகவும் இருந்தது.
சுமார் 136 முறை இந்திய ஒருநாள் போட்டிகளுக்காக தாதா மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் இணை ஆடியுள்ளது.இதில் 49.32 என்ற ஆவ்ரேஜூடன் உட்சபட்ச ரன்களான 6609 என்ற மலைக்கும் அளவிற்கு இந்த இணை சேர்த்துள்ளது.கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்த அணி சேர்த்த 258 ரன்கள் இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு தொடக்க ஜோடியின் உச்சகட்ட பார்ட்னர்ஷிப்பாக இன்றளவும் உள்ளது.மேலும் இவர்களது கூட்டணியில் உருவான 21 சதங்களும் 23 அரைசதங்களும் ஒருநாள் போட்டியில் செய்த மிகச்சிறந்த சாதனைகளாகும்.