2.கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக் இணை:
காலம் : 2003 - 2013
சச்சின் டெண்டுல்கர் துவக்க ஆட்டக்காரராக இல்லாமல் ஆட்டத்தைத் துவக்கிய வாய்ப்பு இந்த இணைக்கே முதல்முறையாக கிடைத்தது.மேலும் இவர்கள் ஆடிய முதல் மற்றும் கடைசி போட்டிவரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.அணிக்கு நீண்டகாலமாக பல்வேறு மறக்கமுடியாத தருணங்களையும் வெற்றிகளையும் குவித்ததால், இவர்களே மிகவும் வெற்றிகரமான துவக்க ஜோடியாக கருதப்படுகிறது.
இவர்கள் இந்திய அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 1870 ரன்களையும் 50.54 என்ற சிறந்த ஆவரேஜையும் வைத்துள்ளனர்.துவக்க இணையாக இவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் குவித்தே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.மேலும், இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும் 7 அரைசதங்களும் அடித்துள்ளனர்.
3.சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் இணை:
காலம் : 2002 -2012
இந்த ஜோடியானது ஒரு குரு மற்றும் சிஷ்யனை உள்ளடக்கிய ஜோடியாகவே அறியப்பட்டது.சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக் இணையே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அச்சுறுத்தக்கூடிய இணையாக கருதப்படுகிறது.ஆட்டத்தின் ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கும் ஷேவாக், பொறுமையாக கிளாசிக் ஷாட்களை நொறுக்கும் சச்சினின் அனுபவம் ஆகிய இரண்டும் ரசிகர்களுக்கு விருந்தளித்தது.2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர்களது பங்கு ஏராளம்.
இந்திய அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 12 சதங்களும் 18 அரைசதங்களும் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பெற்றவை.மேலும் இந்திய ஒருநாள் போட்டிகளில் 93 இன்னிங்சில் 3919 ரன்களை 42.13 என்ற ஆவரேஜூடன் இவர்களது சாதனை அடங்கும்.மேலும் இவர்கள் குவித்த 182 ரன்களே இவர்களது அதிகப்படியான பார்ட்னர்ஷிப்பாகும்.