டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்

அந்த காலத்தில் பயன்படுத்திய ஸ்கோர் போர்டு
அந்த காலத்தில் பயன்படுத்திய ஸ்கோர் போர்டு

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 400 ரன்கள் எடுப்பது கடினமான ஒன்று. அதுவே டெஸ்ட் போட்டிகள் என்றால் 500 முதல் 800 ரன்கள் வரை ஒரு அணி எடுக்கலாம். 600 ரங்களுக்கு மேல் எடுத்தால் போதும் , நல்ல பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணியை வீழ்த்தி விடலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முதலாக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் 600 ரன்களுக்கு மேல் எடுத்தது. அப்படி 600 ரன்களுக்கு மேல் அதிக முறை எடுத்த 5 அணிகளை பற்றிய தொகுப்பை காணலாம்.

#5 பாகிஸ்தான் - 15 முறை

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி எப்போதுமே நல்ல பந்து வீச்சாளர்களை கொண்ட அணி. ஆனால் இந்த அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 15 முறை 600 மற்றும் அதற்கு மேல் ரன்கள் எடுத்துள்ளது. இந்த பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள பாகிஸ்தான், இதுவரை 750க்கும் மேற்பட்ட டெஸ்ட் இன்னிங்சில் பங்கு பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டி 1952ம் ஆண்டு அரங்கேறியது. 2009ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக 765/7 ரன்கள் எடுத்தது.

1958ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் முதன்முதலாக 600 ரன்களுக்கு மேல் எடுத்தது. இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. பாஸ்கிதான் அணி 657/8 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 579/9 and 28/0 எடுத்தது.

#4 இங்கிலாந்து - 20 முறை

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

இந்த பட்டியலில் 4வது இடம் பிடித்திருப்பது இங்கிலாந்து அணி. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 20 முறை 600 மற்றும் அதற்கு மேல் ரன்களை கடந்துள்ளது. முதன் முதலாக 1928ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 600 ரன்களுக்கு மேல் எடுத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 636 and 16/2 ரன்களும் , ஆஸ்திரேலிய அணி 253 and 397 ரன்களும் இப்போட்டியில் எடுத்தனர்.

இதுவரை 1800 இன்னிங்சிற்கு மேல் விளையாடியுள்ள இங்கிலாந்து, 700 ரன்களை ஒரு முறையும், 800 ரன்களை ஒரு முறையும் மற்றும் 900 ரன்களை ஒரு முறையும் எடுத்து சாதனை படைத்துள்ளது. இவர்களின் அதிக பட்ச ஸ்கோராக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1938ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 903/7 எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற அணியாக இங்கிலாந்து உள்ளது.

#3 மேற்கிந்திய தீவுகள் - 20 முறை

மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள்

1948 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக 600 ரன்களை கடந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இரண்டு அணிகளும் ரன்களை குவித்த இந்த போட்டி டிராவில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 631 ரன்களும், இந்திய அணி 454 and 220/6 ரன்களும் பதிவு செய்தது. 1970 மற்றும் 80'களில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் வலுவான அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். 975 இன்னிங்சில் விளையாடியுள்ள இந்த அணி, 20 முறைக்கு மேல் 600 ரன்களை கடந்துள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை தொடர்ந்து அதிக வெற்றிகள் பெற்ற அணியாக உள்ளது மேற்கிந்திய தீவுகள். அதிகபட்ச ஸ்கோராக கிங்ஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 790/3 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

#2 இந்தியா - 32 முறை

இந்திய அணி
இந்திய அணி

இந்திய அணி எப்போதும் பேட்டிங்கிற்கு பேர் பெற்றவர்கள். அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் பேட்டிங்கில் அசைக்க முடியாத அணியாக உள்ளது இந்தியா. கான்பூர் மைதானத்தில் 1979 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதன் முதலாக 600 ரன்களை கடந்தது இந்தியா. இப்போட்டியில் இந்தியா 655/7 ரன்களும் , மேற்கிந்திய தீவுகள் 452/8 ரன்னும் எடுத்து டிராவில் முடிந்தது. இந்திய அணி இதுவரை 700 ரன்களை 4 முறை கடந்துள்ளது. மொத்தமாக 600 ரன்களை 32 முறை தாண்டியுள்ளது.

அதிகபட்ச ஸ்கோராக 759/7 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டி 2016ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

#1 ஆஸ்திரேலியா - 34 முறை

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றல் அதிக வெற்றிகளை கண்ட அணியாக உள்ளது ஆஸ்திரேலியா. 1500 க்கும் மேற்பட்ட இன்னிங்சில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி, 34 முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. அதிகபட்ச ஸ்கோராக கிங்ஸ்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 758/8 பதிவிட்டது. 1925ம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக 600 ரன்னை கடந்து அப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 600 and 250 ரன்களும், இங்கிலாந்து அணி 479 and 280 ரன்னும் எடுத்து தோல்வியை தழுவியது. 4 முறை 700 ரன்களையும் கடந்துள்ளது ஆஸ்திரேலியா..

Quick Links