உலகக் கோப்பையினால் வருவாய் பலன் பெறுபவர்கள்

உலகக் கோப்பை 2019
உலகக் கோப்பை 2019

கிரிக்கெட் உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச போட்டிகளில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். போட்டியை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என கணிக்கபடும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. ஆனால் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், இந்திய நிறுவனங்கள் பெரும் வருவாயைப் பெறும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டித்தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஜூன் 9ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. உலக கோப்பை தகுதி சுற்று ரவுண்ட் ராபின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடன் மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இந்தியாவின் விராட் கோஹ்லி, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட உலகின் தலை சிறந்த வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பையில் ஸ்டார் குழுமம்

கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலகளாவிய ஒளிபரப்பு பங்குதாரராக டிஸ்னிக்கு சொந்தமான இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கு ஏலம் விட்டுள்ளது. அதன் துணை நிறுவனமான ஸ்டார் டிவி மூலம், இந்தியா, வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கு பிரதானமாக ஒளிபரப்புகிறது.

ஸ்டார் குழுமத்தின் மூலமாக ஐ.சி.சி நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்கள் என 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது ஸ்டாட் நெட்வோர்க். தனது சொந்த டிஜிட்டல் சேவையான ஹாட் ஸ்டாரிலும் நேரலையை காணலாம்.

ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பங்கு

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடைபெறும் உலகக் கோப்பைக்கு 20க்கும் மேற்பட்ட பிராண்டுகளை தனது வணிகப் பங்காளியாக (ஸ்பான்சராக) ஐசிசி ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்திய நிறுவனங்களே, மற்ற நிறுவனங்களும் இந்தியாவை சார்ந்து இயங்கும் நிறுவனங்களே. அவற்றில் எம்.ஆர்.எப் டயர்ஸ், பீர் பிராண்டான பீரா 91 மற்றும் உணவு நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் ஆகியவை அடங்கும்.

ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர் வருவாய்கள் ஐசிசிக்கு சென்றுவிடும். டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்க்கு செல்கின்றன. அவர்கள் அந்த பணத்தை கிரிக்கெட் விளையாட்டு மேம்பாட்டிற்க்கு பயன்படுத்தப் போவதாக (பள்ளிகள் மற்றும் கிளப்களுகிடையேயான போட்டிகள் மூலம்) உறுதியளித்துள்ளனர். இதற்கிடையில், விருந்தோம்பல், உணவு, கேண்டின் மற்றும் கார் நிறுத்தம் ஆகியவற்றின் அனைத்து வருவாயும் போட்டியை நடத்தும் மைதானத்திற்க்கு செல்கிறது.

டிக்கெட்டுகள் விற்பனை

6,50,000 க்கும் அதிகமான போட்டி டிக்கெட்டுகள் இதுவறை விற்றுள்ளன. 3 மில்லியனுக்கும் மேலான விண்ணப்பதாரர்கள் டிக்கெட்களுக்காக விண்ணப்பித்திருந்தனர். அதிகபட்சமாக ஜூன் 16 அன்று மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட் $600 முதல் $3,700 வரையில் விற்பனை செய்யபடுகிறது.

கிரிக்கெட் அபரிமிதமாக அனைத்து நாடுகளிலும் வளர்ந்து வருகிறது. இதுவரை ஐசிசியில் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்டார் குழுமம் தனது பங்குதாரர்கள் உதவியுடன் வேவ்வெறு நிறுவனங்கள் வழியாக நேரலையை ஒளிபரப்புகிறது. உலகளாவிய ஒளிபரப்பு பங்குதாரர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பைக்கான வருவாயை 143 மில்லியன் டாலர்கள் இலக்காகக் கொண்டுள்ளது.

Quick Links

App download animated image Get the free App now