மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுப்போம்!!

Trent Boult
Trent Boult

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுப்போம் என்று கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது இந்தியா. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 21-ம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 38 ஆவது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி சார்பில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மா அவுட் ஆகி வெளியேறினார்.

Shikar Dhawan
Shikar Dhawan

பின்பு தவானும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 46 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் தவான் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரை சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஆவது ஓவரின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் top ஆர்டர் பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கிய முகமது சமி இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியது என்னவென்றால், நாளைய போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அது மட்டுமின்றி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அவுட் செய்ய முயற்சி செய்வோம். முதல் 10 ஓவர்களுக்குள் தொடக்கத்தில் உள்ள 3 விக்கெட்டுகளையும் நாங்கள் வீழ்த்தி விட்டால் நிச்சயம் இந்திய அணி கடுமையாக திணறும்.

Nezealand Cricket Team
Nezealand Cricket Team

எனவே நாங்கள் தொடக்கத்தில் உள்ள 3 விக்கெட்டுகளை எடுத்து விட்டால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்போம். முதல் போட்டியில் செய்த தவறுகளை நாங்கள் நிச்சயம் திருத்திக்கொள்வோம். நாளைய போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட். இந்த போட்டி நாளை நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links