சென்னை சுழலில் சுருண்ட பெங்களூரு, டிவிட்டரில் ஆர்ப்பரித்த ஹர்பஜன்சிங்!!

Devaraj
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்பஜன் சிங்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் உலகம் காணத் துடித்துக் கொண்டிருந்த 12வது ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பெங்களூரை பேட்டிங் செய்ய பணித்தார். ஆட்டத்தை தொடங்கிய பெங்களூரு சென்னையின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்ஸ்ஆகியோரையும் ஹர்பஜன் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார்.

அவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு பெங்களூரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணியில் பார்த்திவ் பட்டேல் அதிகபட்சமாக 28 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் டக் அவுட் ஆக அந்த அணியும் நிதானமாகவே விளையாடியது. அம்பதிராயுடு 28 ரன்களும், சுரேஷ் ரெய்னா 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் நின்று 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.

இந்நிலையில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஹர்பஜன்சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டம் முடிந்தபின் தனது டிவிட்டரில் தமிழில் பின்வருமாறு பதிந்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தி பெங்களூரை வம்பிழுத்துள்ளார்.

"ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB".

இது மட்டுமில்லாது ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ரெய்னாவை பாராட்டியும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அது வருமாறு

நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன்சிங்கிற்கு யுவராஜ் சிங், சக்லின் முஷ்டாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிக்கு காரணம்:

மேலும் வெற்றிக்கான காரணமாக பார்க்கப்பட்டது டோனியின் சரியான கணிப்பும், கோஹ்லியின் தவறான கணிப்புமே ஆகும். டாஸ் போட்ட பிறகு தோனி, "பிட்சின் தன்மை மெதுவாக உள்ளது அதனால் எவ்வளவு ரன்கள் குவிக்கவேண்டும் என்பது சிக்கலான ஒன்று" என்று கூறினார். இதன் காரணமாக சென்னை அணியில் 9 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் தற்போது தடைசெய்யப்பட்ட ராயுடு மற்றும் தோனி கீப்பிங் செய்வதால் அந்த பௌலிங் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஆனால் கோஹ்லி "கடந்தவருடத்தில் KKR அடித்த 205 ரன்களையும் சென்னை அணி சாஸ் செய்தது அதனால் பேட்டிங்கிற்கு உதவும் என தப்பு கணக்கு" போட்டார். இதனை கருத்தில் கொண்டு வேகப்பந்துவீச்சை களமிறங்கினார் கோஹ்லி. சென்னை அணியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த நேகி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இப்படி கேப்டன்சியில் சொதப்பும் கோஹ்லி தனது அணியை எவ்வாறு கரையேற்றுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Quick Links